ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

விக்கிமேற்கோள் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், w:1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

[தொகு] மேற்கோள்கள்

  • தவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.
  • அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.
  • எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். :ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அதற்கு எதிராக செய்ய முடியும்.
  • ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.
  • வெகு அதிகமாக படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித் தனத்துக்கு சென்றிடுவான்.
  • சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.
  • கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.

[தொகு] வெளி இணைப்புகள்

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"http://ta.wikiquote.org/w/index.php?title=ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்&oldid=5905" இருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்