வி. வைரமுத்து

விக்கிமேற்கோள் இருந்து
(கவிஞர் வைரமுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Vairamuthu.jpg

வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

மேற்கோள்கள் [தொகு]

  1. புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை; புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்
  2. காலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது
  3. இலட்சியமில்லாத வாழ்க்கை ஆணியில் தொங்குகிற சட்டை மாதிரி உள்ளீடற்றுத் தள்ளாடுகிறது
  4. நமது கல்வி விரல்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை
  5. பலர் நாற்காலி கிடைக்கும் வரை தீயைப்போல சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். கிடைத்தபிறகோ, அந்த நாற்காலியைப் போல் விறைத்துப் போகிறார்கள்
  6. நம்முடைய அகராதியில் அரசாங்க ஊழியன் என்பவன் ஒன்றாம்தேதி மட்டும் உறங்காதவன். மருத்துவன் என்பவன் தும்மிக்கொண்டே ஜலதோசத்துக்கு மருந்துகொடுப்பவன்
  7. (நமது கல்வியில்) தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல.
  8. களத்திற்கு வந்தபிறகு நீ கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்க முடியாது
  9. புகழின் பின்னால் நீ போனால் அது பொய்மான்; புகழ் உன் பின்னால் வந்தால் அது நிஜமான்; அப்போதுதான் நீ அதற்கு எஜமான்
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"http://ta.wikiquote.org/w/index.php?title=வி._வைரமுத்து&oldid=6408" இருந்து மீள்விக்கப்பட்டது