சித்தர்கள்

விக்கிமேற்கோள் இலிருந்து

சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  • மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் - அகத்தியர்
  • மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே முத்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே - இடைக்காட்டுச் சித்தர்
  • கிச்சு மூச்சுத் தம்பலம், கீயோ மாயோ தம்பலம், மாச்ச மாச்சுத் தம்பலம், மாய மாயத் தம்பலம் - இடைக்காட்டுச் சித்தர்
"https://ta.wikiquote.org/w/index.php?title=சித்தர்கள்&oldid=6961" இலிருந்து மீள்விக்கப்பட்டது