தேரையர்
Wikiquote தளத்திலிருந்து
தேரையர் தமிழ்நாட்டின் பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர் இயற்றிய "நோய் அணுகா விதி" என்னும் நூலில் இருந்து பின்வரும் பா தரப்படுகிறது:
உண்பது இருபொழுதொழிய முப்பொழுதும் உண்ணோம்.
உறங்குவது இராவொழியப் பகலுறக்கம் செய்யோம்.
பெண்கடமை திங்களுக்கு ஓர்கால் அன்றி மருகோம்.
பெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்து நீர்-அருந்தோம்.
மண்பரவு கிழங்குகளில் கருணை-அன்றிப் புசியோம்
வாழை-இளம் பிஞ்சொழியக் கனி-அருந்தல் செய்யோம்.
நண்பு-பெற உண்டபின்பு குறுநடையும் கொள்வோம்.
நமனார்க்கு இங்கு-ஏது கவை நாம் இருக்கும் இடத்தே!
திங்கள்- மாதம்; ஓர்கால் - ஒரு தடவை; கருணை - கருணைக் கிழங்கு; நண்பு - நண்பர்கள்; பெற உண்ட பின்பு - (நண்பர்களோடு) பகிர்ந்து உண்ட பின்பு; நமனார் - எமன்; கவை - வேலை .
மூலம்: சதாசிவம்பிள்ளை/ ஜே.ஆர்.அர்னால்டு , "பாவலர் சரித்திர தீபகம்", ஏசியன் எஜுகேஷனல் சர்வீஸஸ் [1] , புது தில்லி (email: asianeds@nda.vsnl.net.in), சென்னை (email: asianeds@md3.vsnl.net.in)