முகமது நபி

விக்கிமேற்கோள் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
  • தீமையை எங்கு கண்டாலும், உன் கரங்களால் தடு. இயலவில்லையா, உன் வாய்ச் சொல்லால் தடு. அதுவும் இயலவில்லையா, உன் மனத்தாலாவது அதை வெறுத்தி விலகிச் செல்.
  • உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன்.
  • நெருப்பு விறகைத் தின்பது போல கபடமும், பொறாமையும் நன்மைகளைத் தின்றுவிடும்.
  • தொழுகை முஸ்லீம்களின் முக்கியக் கடமை. தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.
  • உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார்.
  • மனிதர்களைப் பற்றித் தீய எண்ணங்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • கொடுக்கும் கையானது வாங்கும் கையைவிட மேலானது.
  • கண்டிப்பாக மதுவே அனைத்து கெட்ட காரியங்கலுக்கும் தாய் ஆகும்.
"http://ta.wikiquote.org/w/index.php?title=முகமது_நபி&oldid=5950" இருந்து மீள்விக்கப்பட்டது