பிள்ளை

விக்கிமேற்கோள் இலிருந்து

பிள்ளை அல்லது குழந்தைப் பருவம் என்ற சொல் பொதுவாக, மனிதரில் பிறப்புக்கும், பருவம் அடைவதற்கும் இடைப்பட்ட இளம் வயதினரைக் குறிக்கும். இது ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவான பெயராக இருக்கிறது.

குழந்தைகள் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • குழந்தைகளுக்குக் கதைகளைக் கதைகளாகச் சொல்லிக் கொடுங்கள், புராணங்களை புராணங்களாகச் சொல்லிக் கொடுங்கள், ஒருபோதும் அவற்றை உண்மை என்று சொல்லிக் கொடுக்காதீர்கள்.- ஹைபேஷா
  • குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தைக் கற்றுக் கொடுங்கள், அதுதான் இந்த அற்புதமான உலகைக் காப்பாற்றும். -ஆலிஸ் வாக்கர்
  • கட்டளைகளைவிட வழிகாட்டுதலும், அக்கறையும்தான் குழந்தைக்குத் தேவை. ஆன் சல்லிவன் (ஹெலன் கெல்லரின் ஆசிரியர்)
  • கணிதத்தைப் பார்த்து ஏன் குழந்தைகள் அஞ்சுகிறார்கள், ஏனென்றால் அதை ஒரு பாடமாக தவறான விதத்தில் அதை அணுகுவதால்தான். - சகுந்தலா தேவி (கணித மேதை)
  • உங்கள் குழந்தையுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல அன்பையும், சிரத்தையையும் எப்படி காட்டுகிறீர்கள் என்பதே முக்கியம். - மார்கரெட் தாட்சார்
  • கடவுள் உலகத்துக்கு அளித்த அழகான பரிசு குழந்தை. - அன்னை தெரசா
  • பொறுப்புகளும் சுதந்திரத்திற்கான இறக்கைகளும்தான் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உன்னதமான பரிசுகள். மரியா மாண்டிசேரி (கல்வியாளர்)[1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016, 11, 20
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிள்ளை&oldid=20992" இலிருந்து மீள்விக்கப்பட்டது