ச. முகமது அலி

விக்கிமேற்கோள் இலிருந்து

ச. முகமது அலி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 1980-முதல் சுற்றுச்சூழல் தொடர்பாகப் பேசியும் எழுதியும் வருகிறார். காட்டுயிர் என்னும் திங்களிதழைத் தொடங்கி நடத்தி வருகிறார் மற்றும் ஆறு நூல்களைப் படைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  • இயற்கையைப் போற்றி அதனுடனே பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் தமிழர்களுடையது. ஆனால், தமிழ்ப் பாரம்பரியம் என்கிற பெயரில் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறோம். 400, 500 ஆண்டு காலமாக அந்த பாரம்பரியத்தை நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.
  • நம்முடைய எழுத்தாள மேதாவிகளுக்கு உயிரினங்கள் பற்றிய எந்த அறிவும் கிடையாது, பெயர் தெரியாது, வகையும் தெரியாது. பொதுமக்கள் மத்தியில் வனஉயிரினங்களைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்புவதில் இவர்களுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘பயங்கரமான காடு’, ‘சூழ்ச்சி செய்யும் நரி’ என்று எவ்வளவோ தவறான உதாரணங்களைத் தந்துகொண்டு இருக்கிறார்கள்.
  • நமக்கு பயன்படக்கூடிய உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்துல இருந்தால் போதாதா என்கிற கேள்வி பலருக்கு வருவதுண்டு. உண்மையில் இயற்கையோடு ஒவ்வொன்றும் பிணைந்துதான் இருக்கிறது. உதாரணத்துக்கு நீலகிரி மலையில் வசிக்கிற இருவாசிப் பறவை அழிந்தால் அதோடு தொடர்புடைய பத்து வகையான மரங்களும் அழிந்துவிடும்.. காரணம், இருவாசிப் பறவை சாப்பிட்டு வெளியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கிறது. அதனாலதான் மரங்கள் செழித்து வளர்கிறது. இப்படி நம்மைச் சுற்றியிருக்கிற பல்லுயிர்களும் செழிப்பாக இருந்தால்தான் நாமும் செழிப்பாக இருக்கமுடியும்

புற இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ச._முகமது_அலி&oldid=9143" இலிருந்து மீள்விக்கப்பட்டது