வெற்றிலையின் சிறப்புகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

வெற்றிலையின் சிறப்புகள்

வெற்றிலை என்பது கொடி வகையைச் சேர்ந்தது.செரிமானத்திற்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது. அரசன் முதல் ஆண்டி வரை உபயோகிக்கும் பொருள் உண்டென்றால் அது வெற்றிலையே.உண்டைதச் செறிக்கக் கண்டதைப் பேசும்

திண்ணைப் பேச்சாளர்களிலிருந்து, உடுத்தத் துணியற்ற பஞ்ஞைப் பண்டாரங்கள் வரை வெற்றிலை போடுவதை ஒரு

வழக்கமாகக்கொண்டு இருக்கிறார்கள்.

வருமுன் காக்கும் மூலிகை

       சிறையில் அடைபட்டுக் கிடப்போருக்கு மலேரியா போன்ற கொடிய காய்ச்சல் வராமல் 

தடுக்கும் பொருட்டு நெதர்லாந்து அரசாங்கம் கைதிகளுக்கு வெற்றிலை கொடுத்து வந்தது.

சமாதானத் துாதுவன் வெற்றிலை

       ஏதாவது ஒரு செய்தியைப் பற்றி பேசும் போது  அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளும் இருவர், முடிவில்

தங்களுக்குள் வெற்றிைலை மாற்றிக் கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் உள்ளது.

வெற்றிலையின் பண்புகள்

       வெற்றிலையானது அதன் நிறத்தாலும், மனத்தாலும் , கார்ப்புச் சுவையின் பேதத்தாலும் மூன்று வகைப்படும்.

அதிகக் காரமும் மணமும் கறுப்பு நிறம் இல்லாதது "வெற்றிலை".கருமையும் காரமும் மிகுந்தது "கைமாறு வெற்றிலை ". கற்புர மணமும் சிறுகாரமும் கூடியது "கற்புற வெற்றிலை.

பாரதி கண்ட தாம்புலம்

 "கங்கை நதிப்புரத்து கோதுமைபண்டம்
    காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் "
               என்று பாரதியார் பண்ட மாற்று முறைக்கு வெற்றிலை பயன்பட்டதை அறிகிறோம்.

வெற்றிலை போடும் விதம்

        "மேற்றிலையும் கீழ்க்காம்பும் வெந்நரம்பும் வெண்பல்லைத்
         தீர்த்தாமல் வெற்றிலைையத் தின்றாக்கால் மாற்றதரை
         வெல்லப்போர் செய்யும் விறல் நெடுமோ லாயிடினும்
         செல்லப் போய் நிற்கும் திரு
         காலை பிளவதிகம் கட்டுச்சி நீறதிகம்
         மாலை இலையதிகம் வாணுதலே - சாலவே
         ஆம்போது நீரிறக்க லாகாது சொன்னேன் கேள்
         தாம்புலங் கொள்வார் தமக்கு"
               
                           வெற்றிலையின் நுனியையும் காம்பையும் கிள்ளி முதுகு நரம்பை எடுத்து விட வேண்டும். பல் 

துலக்கும் முன்பு தாம்புலம் தரித்தலாகாது. காலையில் பாக்கு மிகுதியாகவும்,பிற்பகலில் சுண்ணாம்பு மிகுதியாகவும், மாலையில் வெற்றிலை மிகுதியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெற்றிலையின் மருத்துவக் குணம்

  வெற்றிலையானது  செறிமானத்திற்கு உதவுகிறது. தேள் கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இருமலுக்கு மருந்தாகவும் னயன்படுகிறது.தலைவலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. தீக்காயத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது. மலச்சிக்கலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. ஆயுர் வேத மருந்து தயாரித்தலுக்கும் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது. தலைவலி, தீப்புண்கள் போன்றவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது .

"https://ta.wikiquote.org/w/index.php?title=வெற்றிலையின்_சிறப்புகள்&oldid=14998" இலிருந்து மீள்விக்கப்பட்டது