அபாயம்

விக்கிமேற்கோள் இலிருந்து

அபாயம் அல்லது ஆபத்து என்பது அல்லல், இன்னல், கேடு, துன்பம் பழுது போன்றவை உருவாக்கும் சூழலாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • கூச்சமுள்ளவன் அபாயம் வருமுன்பே நடுங்குவான். கோழை அது வரும்பொழுது நடுங்குவான். தைரியமுள்ளவன் வந்த பிறகு அஞ்சுவான். - ரிச்டெர்[1]
  • அபாயத்திற்கு அஞ்சுதல் அதைத் தடுக்கத் தூண்டுகோலாக வேண்டும் அச்சப்படாதவன் அபாயத்தை வெல்வது அரிது. - குவார்லெஸ்[1]
  • அபாயம் மனிதனையும் விலங்கையும் ஒரே நிலைக்குக் கொண்டுவருகின்றது. அவசியம் வரும்பொழுது எல்லோரும் ஒன்றுதான். - பைரன்[1]
  • அபாயத்தை அறவே விலக்குவதில் நாம் உறுதியில்லாத கோழைகள் என்று காட்டும்படி நாம் ஒரு போதும் செய்யக்கூடாது. ஆனால், அதே சமயத்தில், தேவையில்லாத முறையில் நாம் அபாயத்திற்கு உள்ளாகும்படியும் நடக்கக் கூடாது. அதைவிட அறிவீனம் வேறில்லை. - ஸிஸெரோ[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 32-33. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் அபாயம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அபாயம்&oldid=19208" இலிருந்து மீள்விக்கப்பட்டது