செர்பிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் செர்பிய பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • அதிருஷ்டத்தில் உயர்ந்தது நல்ல கணவன் வாய்ப்பது, அடுத்தது நல்ல வேலைக்காரன் வாய்ப்பது.
  • ஒரு சகோதரிக்குக் கலியாணமானால், அடுத்தவளுக்கும் ஆகும். ஒரு தொட்டி விற்றால், அடுத்ததும் விலையாகும்.
  • ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதைப் பார்க்கினும் ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்.
  • என்னை என் குடும்பத்திலிருந்து காப்பாற்றுங்கள்; என் எதிரிகளை நானே பார்த்துக் கொள்கிறேன்.
  • காதலுக்கும் செல்வத்திற்கும் துணை வேண்டியதில்லை.
  • கிழவியும் சயித்தானும் எப்பொழுதும் கூடியே யிருப்பார்கள்.
  • கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு; நல்லவளைப் பற்றி எப்படியும் பேசலாம்.
  • சில சமயங்களில் அறிவுள்ள மனைவியின் சொல்லையும் கேட்டு நடக்கலாம்.
  • தரையை வைத்து வீடு கட்டப் பெறுவதில்லை, ஒரு பெண்ணை வைத்தே கட்டப் பெறுகின்றது.
  • பெண்ணின் காதல் சயித்தானின் வலை.
  • மனிதனுக்குச் சந்தோஷம் இரு தடவைகள் வரும்: ஒன்று மனைவியை அடையும் பொழுது, மற்றது அவளைப் புதைக்கும் பொழுது.
  • மனைவி இன்றியமையாத ஒரு தீமை.
  • வீட்டைவிட்டு ஓடுபவன் வீட்டுக்கே திரும்பி வருவான்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செர்பிய_பழமொழிகள்&oldid=37893" இலிருந்து மீள்விக்கப்பட்டது