உத்தமன்
தோற்றம்
உத்தமன் (Uththaman) என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்கள்
[தொகு]- அன்பாக கொடுத்த பொருளை விலை பேசக்கூடாது. அந்தப் பொருளை பார்க்கும் போதெல்லாம் கொடுத்தவர் நினைவு வரும். (நாயகி மஞ்சுளா பொம்மைக்காக பசம் தர வரும்போது நாயகன் சிவாஜி கூறுவது)
- பணத்தைக் கொடுத்தா உலகையே விலைக்கு வாங்கலாம். உண்மையான நல்ல அன்பு உள்ள இதயத்தை வாங்க முடியாது. (வீ. கே. இராமசாமியிடம் நீயகன் உரைப்பது)
- நீங்கள் கொடுப்பதை என்னால் வாங்க முடியாது, நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது.