கௌதம புத்தர்

விக்கிமேற்கோள் இலிருந்து
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:01, 17 ஏப்பிரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்* using AWB)
ஆசையே துன்பத்தின் அடிப்படை.

கௌதம புத்தரை (Gautama Buddha) அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார்.

மேற்கோள்கள்

  • ஆசையே துன்பத்தின் அடிப்படை.
  • இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் எண்ணற்ற மாற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பரம்பொருள் என்ற ஒன்றில்லை.[1]
  • ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணமின்றி விளைவில்லை. இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது.[1]
  • நிரந்தரமானது என்ற தோற்றத்தை அளிப்பது எல்லாம் தற்காலிகமானதே. அவை அனைத்தும் மறைந்துவிடும்.[2]
  • பெருமையின் சிகரத்தை எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும். தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும்.[2]
  • எங்கு ஒற்றுமை இருக்கிறதோ அங்கு வேற்றுமையுண்டு. எங்கெல்லாம் வாழ்வு தென்படுகிறதோ அங்கெல்லாம் சாவுமுண்டு.[2]
  • பிரபஞ்சம் நிரந்தரமானது அல்ல, அனைத்தும் மாறிக்கொண்டேச் செல்கிறது.[2]
  • அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை
  • கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்

சான்றுகள்

  1. 1.0 1.1 காசியில் நடைபெற்ற முதல் தத்துவ விளக்கப் பேருரை.
  2. 2.0 2.1 2.2 2.3 இந்திய மண்ணில் பொருள்முதல்வாதக் கருத்துகள், வி.பி. சிந்தன், பாரதி புத்தகாலயம்

புற இணைப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கௌதம_புத்தர்&oldid=10880" இலிருந்து மீள்விக்கப்பட்டது