ஜோஹன் பால் பிரீட்ரிக் ரிக்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
File
 
வரிசை 1: வரிசை 1:
[[File:Jeanpaul.jpg|thumb|]]

'''ஜோஹன் பால் பிரீட்ரிக் ரிக்டர்''' (21, மார்ச் 1763 - 14, நவம்பர் 1825) ஒரு ஜெர்மன் புதின எழுத்தாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் பொதுவாக இவரது புனைபெயரான '''ஜீன் பால்''' என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார்.
'''ஜோஹன் பால் பிரீட்ரிக் ரிக்டர்''' (21, மார்ச் 1763 - 14, நவம்பர் 1825) ஒரு ஜெர்மன் புதின எழுத்தாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் பொதுவாக இவரது புனைபெயரான '''ஜீன் பால்''' என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார்.
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

14:04, 16 பெப்பிரவரி 2020 இல் கடைசித் திருத்தம்

ஜோஹன் பால் பிரீட்ரிக் ரிக்டர் (21, மார்ச் 1763 - 14, நவம்பர் 1825) ஒரு ஜெர்மன் புதின எழுத்தாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் பொதுவாக இவரது புனைபெயரான ஜீன் பால் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

இசை[தொகு]

  • மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பொது உடைமையாகவுள்ள கலை இசையே.[1]
  • இசையே! ஏதேதோ பேசுகிறாய். இதுவரை நான் கண்டதுமில்லை, இனிமேல் காணப்போவதுமில்லை.[1]

இலட்சியம்[தொகு]

  • தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம்.[2]

உண்மை[தொகு]

  • பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும். பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும்.[3]

கல்வி[தொகு]

  • செடியின் மூட்டில் மண்ணை அணைத்து வை. ஆனால் மலருக்குள் விழுந்து விடாமற் பார்த்துக் கொள். உலகவிஷயங்களை எல்லாம் கற்றுக் கொள். ஆனால் அவைகளிடம் ஆன்மாவைப் பறிகொடுத்து விடாதே.[4]

கவிதை[தொகு]

  • ஆராய்ச்சி என்பது மரத்திலிருந்து அடிக்கடி பூக்களுடன் புழுக்களையும் எடுத்துக் கொள்ளும்.[5]

குற்றம் காணல்[தொகு]

  • குறை காண்போர் அநேக சமயங்களில் புழுக்களைக் களையும் பொழுது பூக்களையும் களைந்து விடுகின்றனர்.[6]

செல்வம்[தொகு]

  • செல்வத்தை இகழ்பவனுக்குப் போல வேறெவர்க்கும் செல்வம் அவ்வளவு அதிகமாகத் தேவையாயிருப்பதில்லை.[7]

நல்லதும் கெட்டதும்[தொகு]

  • ரோஜா முள்ளின்றி மலர்வதில்லை, உண்மையே. ஆனால் மலர் இறக்க முள் இருக்கலாகாதன்றோ? [8]

நாவடக்கம்[தொகு]

  • அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.[9]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இசை. நூல் 158-159. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.