ஹியூகோ சாவேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20: வரிசை 20:


* சிலர் மட்டுமே செல்வச் செழுமையைத் தொடர்ந்து அனுபவிப்பதையும், பொருட்கள் வீணடிக்கப்படுவதையும் நியாயப்படுத்தும் சில மனிதர்களின் குருட்டுத்தனமும் தெளிவாய்த் தெரிகிறது. <ref name="g15" />
* சிலர் மட்டுமே செல்வச் செழுமையைத் தொடர்ந்து அனுபவிப்பதையும், பொருட்கள் வீணடிக்கப்படுவதையும் நியாயப்படுத்தும் சில மனிதர்களின் குருட்டுத்தனமும் தெளிவாய்த் தெரிகிறது. <ref name="g15" />

* உலகமயக் கொள்கையானது அநீதியையும் சமத்துவம் இன்மையையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கை. <ref name="g15">

==சான்றுகள்==
==சான்றுகள்==
<references/>
<references/>

02:21, 21 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

படிமம்:HugoChavez1820.jpeg
புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.

ஹியூகோ சாவேஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர். இவர் ஒரு இடதுசாரித் தலைவர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும் வலுவான எதிர்வாதங்களை முன்வைத்த சமகாலத் தலைவர். க்யூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர்.

மேற்கோள்கள்

  • புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வடிவம் பயனற்றதாகிவிட்டது. [1]
  • உலக எண்ணெய் விலை, பல்வேறு நோய்கள், புவி வெப்பமடைதல், ஓசோன் படிமத்தில் ஓட்டை ஆகிய அனைத்தும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. [1]
உலகமயமாக்கலின் (Globalization) விளைவுகள் பற்றிப் பேசும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.
  • பாய்ச்சல் வேக அழிவுத்தன்மையைக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதார மாதிரியை இன்னமும் பொருத்தமானது என்று முட்டாள்தனமாக வலியுறுத்தி மனித இனத்தையே காவு கொடுப்பதானது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல நெறிமுறை மீறிய செயலுமாகும். தற்கொலைக்கு ஒப்பானது.[1]
  • சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக திறமையான முறையில் போராடுவது இன்றைய அவசரத் தேவையாகும். ஆனால், அதற்காக சர்வதேசச் சட்டங்களை மீறிய நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களைத் தொடுப்பதற்கான சாக்காக அதை நாம் பயன்படுத்தக் கூடாது.[1]
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டிக்கிறார்.
  • மனித சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை நமது கைகள் ஓயக்கூடாது. நமது ஆன்மா தூங்கக் கூடாது. அதற்கான காலம் இதுவேயாகும். [1]
  • ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலை உலகமயம் கொண்டுவரவில்லை. ஆனால், சார்ந்து நிற்பதையே அதிகரித்துள்ளது. செல்வத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக, வறுமைதான் விரிவான முறையில் பரவியிருக்கிறது. [2]
  • சிலர் மட்டுமே செல்வச் செழுமையைத் தொடர்ந்து அனுபவிப்பதையும், பொருட்கள் வீணடிக்கப்படுவதையும் நியாயப்படுத்தும் சில மனிதர்களின் குருட்டுத்தனமும் தெளிவாய்த் தெரிகிறது. [2]
  • உலகமயக் கொள்கையானது அநீதியையும் சமத்துவம் இன்மையையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கை. <ref name="g15">

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 16-09-2005 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது.
  2. 2.0 2.1 01.03.2004 அன்று நடைபெற்ற G15 நாடுகளின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

புற இணைப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹியூகோ_சாவேஸ்&oldid=8089" இலிருந்து மீள்விக்கப்பட்டது