மா. நன்னன்
தோற்றம்
மாணிக்கம் திருஞானசம்பந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட மா. நன்னன் (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
இவரின் கருத்துகள்
[தொகு]- நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.[1]
- என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.[1]
- பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.[1]
- மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.[1]
- சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)[1]