யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா

விக்கிமேற்கோள் இலிருந்து

யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா (Johann Wolfgang von Goethe - 28 ஆகஸ்ட் 1749 – 22 மார்ச் 1832) ஒரு ஜேர்மானிய எழுத்தாளர் ஆவார். ஜேர்மனியின் மிகப் பெரிய எழுத்தாளர் என்றும், புவியில் வாழ்ந்த உண்மையான கடைசிப் பல்துறை அறிஞர் எனவும் ஜார்ஜ் எலியட்டினால் பாராட்டப்பட்டவர். இவரது ஆக்கங்கள், கவிதை, நாடகம், இலக்கியம், இறையியல், மனிதநேயம், அறிவியல் போன்ற பல துறைகளையும் தழுவியவை. இவரது மிகச் சிறந்த ஆக்கமாகக் கருதப்படும் ஃபோஸ்ட் (Faust) என்னும் இரண்டு பாகங்களைக் கொண்ட நாடகம் உலக இலக்கியத்தின் உயர்நிலைகளுள் ஒன்று எனப் புகழப்படுகின்றது. இது தவிர பல கவிதைகளும், வில்ஹெல்ம் மீஸ்டரின் தொழிற்பயிற்சி (Wilhelm Meister's Apprenticeship), இளம் வேர்தரின் துன்பங்கள் (The Sorrows of Young Werther) போன்றவையும் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களுள் அடங்குவன.

மேற்கோள்கள்[தொகு]

அடக்கம்[தொகு]

  • எல்லோர்க்கும் பிறர்க்கு எஜமானாயிருக்க ஆசை. ஆனால் எவனும் தனக்கு எஜமானனாயில்லை.[1]

அமரத்துவம்[தொகு]

  • வேறு வாழ்க்கையில் நம்பிக்கையில்லாதவர்கள் இந்த வாழ்விலேகூட இறந்தவர்களாவர்.[2]

அரசாங்கம்[தொகு]

  • நம்மை நாமே ஆண்டுகொள்ளக் கற்பிக்கும் அரசாங்கமே அரசாங்கங்களுள் தலைசிறந்தது.[3]

அரசியல்[தொகு]

  • பாவத்தை நான் வெறுப்பது போலவே, குளறுபடி செய்வதை, அதிலும் அரசியலில் குளறுபடி செய்வதையும் நான் வெறுக்கிறேன். அந்தத் தவற்றினால் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்களுக்குத் துயரமும் அழிவும் ஏற்படு கின்றன.[4]

அரங்கு[தொகு]

  • இயற்கை, பரம்பொருளின் செயல்களை நடித்துக் காட்டும். கலை கண்யமான உள்ளங்களுக்கு மட்டுமே ஒப்படைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது.[5]

அறிவு[தொகு]

  • நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது.[6]
  • நாம் சொற்ப விஷயங்களைப்பற்றி மட்டும் அறிந்திருந்தால் எதையும் துல்லியமாகத் தெரிந்திருக்க முடியும் அறிவு பெருகும் பொழுது ஐயமும் பெருகுகின்றது.'[7]
  • பூரணமாகத் தெரிந்துகொள்ளாத விஷயம் நம் அறிவில் சேராது.[7]
  • மனிதன் பிரபஞ்சத்தின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காகப் பிறந்தவனில்லை; தான் செய்ய வேண்டியதைக் கண்டுகொள்வதே அவன் கடமை; அவன் தனக்குத் தெரிந்த அளவின் எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். [7]

அதிர்ஷ்டம்[தொகு]

  • குற்றங்குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக் கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும். [8]

அறிவீனம்[தொகு]

  • தன் திருப்தியை நாடாது, உலகத்தின் மதிப்பை நாடி, தன் விருப்பத்திற்கு மாறாகப் பொருளும் புகழும் தேடச் சிரமம் எடுத்துக்கொள்பவன் என் அபிப்பிராயத்தில் முழு மூடன் ஆவான்.[9]

அன்பு[தொகு]

  • நமக்கு நன்மை செய்துகொள்ளச் சிறந்த வழி பிறர்க்கு அதைச் செய்வதாகும் இறைத்தால்தான் சேகரிக்க முடியும். சமூகத்தை ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு என்னும் பொற்சங்கிலி.[10]

ஆசையின் தூண்டுதல்[தொகு]

  • ஆசைத் தூண்டுதலே இல்லாமற்போனால், நற்குணமும் இல்லாமற்போகும்.[11]

ஆற்றல்[தொகு]

  • இந்த உலகில் செய்யக்கூடிய எந்தக் காரியத்தையும் ஆற்றல் செய்து முடித்துவிடும்.[12]
  • உங்களுடைய ஆற்றல்கள் வீணாவதில் எச்சரிகையாயிருங்கள்: அவைகளை ஒன்றுசேர்த்து வைத்துக்கொள்ள இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பேரறிவுள்ளவர்கள் மற்றவர்கள் செய்வனவற்றையெல்லாம் தாங்களும் செய்ய முடியும் என்று கருதுவார்கள்: ஆனால், பின்னால் வருந்துவார்கள்.[12]

ஆணவம்[தொகு]

  • பிறர் கர்வத்தை மாற்ற நாம் உபயோகிக்கக் கூடிய மருந்து அன்பு ஒன்றே.[13]

ஆலோசனை[தொகு]

  • நல்ல ஆலோசனையைக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும்.[14]

ஆன்மா[தொகு]

  • ஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறிடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுள்ளது என்பதே உண்மை.[15]
  • ஆன்மா அழிவற்றது என்றும், அதன் வேலை எக்காலத்தும் நித்தியமாகத் தொடர்ந்து நடந்து வருமென்றும் நான் பூரணமாக நம்புகிறேன். இரவில் மறைவதாக நம் கண்களுக்குத் தோன்றும் கதிரவனைப் போன்றது. அது வேறிடத்திற்குத் தன் ஒளியைப் பரப்பவே அது சென்றுள்ளது.[16]

இசை[தொகு]

உயர்ந்த கருத்தில், இசை எனப்படுவது புதுமையாயிருக்க வேண்டிய அவசியமில்லை; அத்துடன் அது எவ்வளவு பழமையாயுள்ளதோ, எவ்வளவு நமக்குப் பழக்கமாயுள்ளதோ அவ்வளவுக்கு அதிகமாக அதன் பயன் இருக்கும்.[17]

இயற்கை[தொகு]

  • முன்னேறுவதிலும், வளர்ச்சியிலும் இயற்கைக்கு ஓய்வே இல்லை. செயலின்மை அனைத்தையும் அவள் சபித்து விடுகிறாள்.[18]

இலக்கியம்[தொகு]

  • இலக்கியத்தின் நலிவு தேசத்தின் நலிவாகும் வீழ்ச்சியில் இரண்டும் சேர்ந்தேயிருக்கும்.[19]

இலட்சியம்[தொகு]

  • வாழ்வின் இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே நீண்டதாகும். யங் இறுதியில் லட்சியத்தை அடைவிக்குங் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு இலட்சியமாயிருத்தல் வேண்டும்.[20]

இளமை[தொகு]

  • குறித்த ஒரு காலத்தில், ஒரு தேசத்தின் கதி அதன் மக்களில் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் அபிப்பிராயங்களைப் பொறுத்துள்ள்து.[21]

இன்பம்[தொகு]

  • எந்த மனிதன் தன் வாழ்க்கையின் இறுதியையும் தொடக்கத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்துள்ளானோ அவனே இன்பமான மனிதன்.[22]

உண்மை[தொகு]

  • ஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் ஆசை உண்டு என்பதற்கு அடையாளம்.[23]
  • உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம்.[23]
  • உண்மை ஒரு பெரிய தீவர்த்தி. அருகில் செல்ல பயந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே அதைக் கடந்து செல்கிறோம். [23]
  • நமக்கு ஆனந்தம் அளிக்கக் காரணமாய் இருப்பது எதையும் மாயை என்று கூற நியாயமே கிடையாது.[23]
  • பிழை செய்தால் பிறர் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொய்கூறினால் பிறர் கண்டுகொள்ள முடியாது.[23]

உரைநடை[தொகு]

  • ஆசிரியனுடைய உரைநடை அவனுடைய மனத்திற்குச் சரியான நகலாகும்.[24]
  • உரைநடை எழுத விரும்பினால் உரைப்பதற்கு ஏதேனும் விஷயமிருத்தல் இன்றியமையாததாகும். ஆனால் விஷயம் ஒன்றுமில்லாதவனும் செய்யுள் செய்து விட முடியும்.[24]
  • இவர் எழுதுவதில் தெளிவில்லை என்று கூறுவோர் அப்படிக் கூறுமுன் தம் இதயத்தில் தெளிவுண்டா என்று ஆராய்தல் அவசியம். எழுத்து எழுத்தாகப் பிரித்து எழுதியிருந்தாலும் கண்ணுக்கு இருட்டில் ஒன்றும் புலனாகாது.[24]

உற்சாகப்படுத்துதல்[தொகு]

  • திருத்துவது அதிக நன்மைதான்; அதனினும் அதிக நன்மையானது உற்சாகப்படுத்துதல். [25]

எழுத்து நடை[தொகு]

  • ஓர் ஆசிரியர் தெளிவாயில்லை என்று குறைகூறும் வாசகன். தன் உள்ளத்தையும் பார்த்து, அங்கு எல்லாம் தெளிவாயிருக்கின்றனவா என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் எவ்வளவு தெளிவான எழுத்தாயிருந்தாலும், இருளில் கண்ணுக்குப் புலனாகாது.[26]

ஐயம்[தொகு]

  • நாம் கொஞ்சம் அறிந்திருந்தால், தெளிவாகக் கண்டு கொள்வோம்; அறிவு மிகுந்தால் சந்தேகமும் அதிகமாகிவிடும்.[27]

கடமை[தொகு]

  • உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய். [28]
  • உனக்கு மிகவும் அருகிலுள்ள கடமையைச் செய். - கதே[29]

கடவுள்[தொகு]

  • தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே. அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம். வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர்.[30]

கடினம்[தொகு]

  • நாம் எதிர்பாராத இடங்களில் தோன்றும் கஷ்டங்களே மிகப் பெரியவை.[31]

கல்வி[தொகு]

  • மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானைவிட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது.[32]

கருத்து[தொகு]

  • நமது மன ஆர்வங்கள் எப்படியோ அப்படியே நம் அபிப்பிராயங்களும் இருக்கும்.[33]

குணம்[தொகு]

  • அறிவைத் தனிமையாயிருந்து பெருக்கிக்கொள்ளலாம்: ஆனால், குணம் அலைகள் வீசும் உலகத்தின் சந்தடியிலிருந்துதான் அமைய வேண்டும்.[34]

குழந்தை[தொகு]

  • ஒருவன் எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும், அவன் அன்பு செலுத்த ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், பாக்கியமற்றவன் என்று சொல்ல வேண்டாம்.[35]

குறை கூறுதல்[தொகு]

  • பகலில் தலைவலி என்று கூறிக்கொண்டு நேரத்தைக் கழித்துவிட்டு, இரவில் அந்த வலிக்குக் காரணமான மதுவை அருந்திக்கொண்டிருப்பவரைப் போல நான் இருக்க மாட்டேன்.[36]

குற்றம் காணல்[தொகு]

  • பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது. காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. அதை அலட்சியம் செய்ய முடியும். அப்படிச் செய்தால் அது தானாக வந்து அடிபணிந்து விடும்.[37]

கொள்கை வெறி[தொகு]

  • காதால் உபதேசம் கேட்பினும் கருத்தில் நம்பிக்கை உண்டாகாவிடில் கடுகளவு நன்மையும் ஏற்படாது.[38]

சிந்தனை[தொகு]

  • உண்மையில் சிறந்த சிந்தனைகள் யாவும் முன்பே பல்லாயிரம் தடவைகள் சிந்திக்கப்பெற்றவையாகும். ஆனால், அவைகளை நம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு. நாம் மறுபடி அவைகளை நேர்மையாகச் சிந்தனை செய்ய வேண்டும். பிறகு, அவை அறுபவத்துடன் வேரூன்றிவிடுகின்றன.[39]

சிரிப்பு[தொகு]

  • எதைக் குறித்து நாம் நகைக்கிறோமோ, அதைத் தவிர வேறெதுவும் நம்முடைய இயல்பைத் தெளிவாகக் காட்டமுடியாது.[40]
  • நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான்.[40]

செய்ந்நன்றி[தொகு]

  • நன்றியறியாமை ஒருவித பலவீனமே. பல முடையவர் நன்றியறியாதிருக்க நான் பார்த்ததில்லை. [41]

செழுமை[தொகு]

  • உலகில் எதையும் தாங்கலாம்.இடைவிடாத செழுமையை மட்டும் தாங்குதல், அரிது.[42]

செல்வம்[தொகு]

  • பணம் தேடுவது முட்டாளுக்கு முடியும். ஆனால், அதைச் செலவு செய்வது அறிஞருக்குத்தான் தெரியும். அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாகச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அது போல் தான் அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும்.[43]
  • பயனுள்ள முறையில் செல்வாக்கை உபயோகிக்க விரும்புவோன் எதையும் அவமரியாதை செய்யக்கூடாது. தவறானவைகளைக் கண்டு அவன் துயருறக்கூடாது. நன்மையை வளர்ப்பதில் அவன் தன் ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும். அவன் அழிவு வேலையில் இறங்காமல், ஆக்க வேலையில் (புதியன படைப்பதில் ஈடுபட வேண்டும். அவன். ஆலயங்களைக் கட்டி மனித சமூகம் அங்கே வந்து. பரிசுத்தமான இன்பத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.[44]
  • வேகமாகச் சேர்ந்த செல்வங்கள் குறைந்துவிடும் சிறிது சிறிதாகச் சேர்ந்தவை பெருகும்.[44]

தகுதி[தொகு]

  • தகுதியும் நல்லதிருஷ்டமும் நெருக்கமுள்ளவை என்பதை மூடர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.[45]

தற்புகழ்ச்சி[தொகு]

  • ஒருவன் தன்னைப்பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும். அதிகத் தாழ்வாக எண்ணுவதும், இரண்டுமே தவறுதான்.[46]

தனிமை[தொகு]

  • நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது. அந்தத் தனி நிலையில் நாம் இருக்க முடியாது. சமூகத்தொடர்பு நம் சொந்த நிலையிலும், மற்றவர்களிடத்தும் சகிப்புத் தன்மையை உண்டாக்குகிறது.[47]

தியாகம்[தொகு]

  • பெரிய விஷயங்களில் தியாகம் செய்தல் எளிது, சிறிய விஷயங்களில் தியாகம் செய்வதே கடினமாகும்.[48]

நல்லதும் கெட்டதும்[தொகு]

  • நேர் வழியில் அடைய முடியாததை ஒருநாளும் நேரல்லாத வழியில் அடைந்துவிட முடியாது.[49]

நீதி[தொகு]

  • ஒரே மனிதனுடைய வார்த்தைகள் எவனுடைய வார்த்தைகனாகவும் ஆகமாட்டா நாம் இரு கட்சிகளையும் அமைதியாகக் கேடக வேண்டும்.[50]

நூல்கள்[தொகு]

  • சாதாரணமாக நூல்கள் என்பன நம்முடைய தவறுகளுக்குப் பெயரிடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை.[51]

நூலாசிரியர்[தொகு]

  • இதுவரை யாரும் கூறாததைக் கூறுவதொன்றே சிறப்பு என்று எண்ணற்க. இதற்கு முன் இதுவரை யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பே யாகும்.[52]
  • ஒவ்வோர் ஆசிரியரும் தாம் விரும்பாவிடினும் தம் நூல்களில் தம்மை ஓரளவு சித்திரிக்கிறார்.[53]
  • மிகவும் சுயமாக எழுதும், ஆசிரியர்கள் அவ்வாறு சுயமாகப் படைப்பவர்களாக் விளங்குவதன் காரணம், அவர்கள் புதிய விஷயத்தைக் கூறுகின்றனர் என்பதன்று. அவர்கள் தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை முன்பு எவரும் சொல்லியிராதவை போல எடுத்தளிப்பதே காரணம்.[53]
  • மிகவும் சுயமாக எழுதும், ஆசிரியர்கள் அவ்வாறு சுயமாகப் படைப்பவர்களாக் விளங்குவதன் காரணம், அவர்கள் புதிய விஷயத்தைக் கூறுகின்றனர் என்பதன்று. அவர்கள் தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை முன்பு எவரும் சொல்லியிராதவை போல எடுத்தளிப்பதே காரணம்.[53]

நூற் சுவை[தொகு]

  • சுவையறிவு இல்லாத கற்பனை சக்தியைப்போல பயங்கரமான தொன்றும் கிடையாது.[54]

நேரம்[தொகு]

  • நாம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், நமக்குப் போதிய நேரம் இருக்கத்தான் செய்யும்.[55]

நோக்கம்[தொகு]

  • மனிதனுடைய செயல்களிலும், இயற்கையின் வேலைகளிலும், நோக்கமே முக்கியமாக ஆராயத்தக்கது.[56]

பகுத்தறிவு[தொகு]

  • ஆராய்ச்சி செய்ய மறுப்பவன், வெறியன் ஆராய்ச்சி செய்ய முடியாதவன். மூடன்; ஆராய்ச்சி செய்ய அஞ்சுபவன் அடிமை.[57]

பழி[தொகு]

  • தற்புகழ்ச்சி முடைநாறும் என்பர்; அப்படியானால் அவர்க்கு அனியாயமாய்க் கூறும் அவதூற்றின் நாற்றம் தெரியாது போலும்![58]

பெண்[தொகு]

  • நல்ல உடை, நடை பாவனைகளுக்குப் பெண்களுடன் சேர்ந்து வாழ்தல் முக்கியமாகும்.[59]
  • நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது.[60]

பேரறிவாளர்[தொகு]

  • பேரறிவாளனுடைய முதற்கடமையும், கடைசிக் கடமையுமாவது உண்மையில் பற்றுக்கொண்டிருத்தல்.[61]

மதம்[தொகு]

  • எல்லாச் சமயங்களுக்கும் ஒரே நோக்கம்தான். விலக்க முடியாததை ஏற்றுக் கொள்ளச் செய்வதே அந்த நோக்கம்.[62]

மன நிறைவு[தொகு]

  •  வருந்துவோர் அருகிருப்பது மகிழ்வோருக்குப் பாரமாகவே யிருக்கும். ஆனால் மகிழ்வோர் அருகிருப்பது வருந்துவோர்க்கு அதனிலும் அதிகப் பாரமாக இருக்கும்.[63]

மனிதர்[தொகு]

  • ஒருவன் எப்பொழுதும் வீரனாயிருக்க முடியாது. ஆனால், ஒருவன் எப்பொழுதும் மனிதனாய் இருக்க முடியும்.[64]

முகத்துதி[தொகு]

  • அன்பு செய்ய முடியாவிட்டால் முகஸ்துதியேனும் செய்யக் கற்றுக் கொள். அதுவுமில்லையானால் அபஜெயம்தான்.[65]

மூடநம்பிக்கை[தொகு]

  • மூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம். அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும்பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும். தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும்.[66]

மொழி[தொகு]

  • அந்நிய மொழிகளை அறியாத மனிதன் தன் சொந்த மொழியையும் அறியான்.[67]

வரலாறு[தொகு]

  • சரித்திரத்திலிருந்து நாம் அடையும் தலைசிறந்த பயன் அது நம் மனத்தில் எழுப்பும் உற்சாகமாகும்.[68]

வறுமை[தொகு]

  • வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை.[69]

விதி[தொகு]

  • எலாம் படைக்கப்பெற்றவை. எல்லாம் முறைப்படி நடைபெறுகின்றன. எனினும், நமது வாழ்நாளில், நிச்சயமாகப் புலப்படாத விதி ஒன்று ஆட்சி புரிகின்றது.[70]

வீடு[தொகு]

  • அரசனாயினும் குடியானவனாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைசிறந்த மகிழ்ச்சியுள்ளவன்.[71]

வினைத்திட்பம்[தொகு]

  • உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்வன் உலகைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக்கொள்கிறான்.[72]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம். நூல் 111- 112. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 37-38. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 234-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. 7.0 7.1 7.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அதிர்ஷ்டம். நூல் 109- 110. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 85-86. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. 12.0 12.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 91-92. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 96-97. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 98-100. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102-103. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105-106. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  21. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 110. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 113-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  23. 23.0 23.1 23.2 23.3 23.4 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  24. 24.0 24.1 24.2 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உரைநடை. நூல் 176-178. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 136-137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  27. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 174. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  28. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  29. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 144-145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  30. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  31. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  32. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  33. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  34. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 161-162. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  35. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  36. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162-163. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  37. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  38. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  39. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 182. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  40. 40.0 40.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  41. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  42. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  43. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  44. 44.0 44.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  45. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 203. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  46. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 207. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  47. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 137-138. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  48. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/தியாகம். நூல் 149-150. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  49. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  50. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  51. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  52. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  53. 53.0 53.1 53.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 243-244. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  54. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூற் சுவை. நூல் 172-174. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  55. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 245-246. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  56. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 247-248. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  57. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 248-249. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  58. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  59. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278-281. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  60. [1]
  61. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286-287. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  62. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  63. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  64. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 302. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  65. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  66. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மூட நம்பிக்கை. நூல் 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  67. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 306-307. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  68. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 177-178. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  69. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  70. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 314. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  71. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 107. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  72. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315-316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.