2025 பகல்காம் தாக்குதல்
தோற்றம்
2025 பகல்காம் தாக்குதல் (2025 Pahalgam atwck) என்பது 22 ஏப்ரல் 2025இல் பாக்கித்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் துணை நிறுவனமான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்டின் தீவிரவாதிகள், இந்தியாவின் சம்மு-காசுமீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிகழ்வாகும். இதில் தற்போது வரை 28 பேர் இறந்துள்ளனர், மேலும் 20-இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். - நரேந்திர மோதி
- பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்கிறது. உயிரிழந்தவர்கள் ஆத்மாவுக்காகவும் காயமடைந்தவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோதி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களின் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபமும் உள்ளது. - டொனால்ட் டிரம்ப்
- இந்த கொடூரமான குற்றத்தை நியாயப்படுத்த முடியாது... இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தத் தயாராக உள்ளோம். - விளாடிமிர் புதின்
- பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்களின் நினைவுகளும் பிரார்த்தனையும் இருக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் துணை நிற்கிறது. - பெஞ்சமின் நெதன்யாகு
- பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நானும் உஷாவும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்... இந்த கொடூரமான தாக்குதலால் அவர்கள் வேதனை அடைந்திருக்கும் இந்த வேளையில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன. - ஜே. டி. வான்ஸ்
- (சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்) இந்த கொடூரமான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். - முகமது பின் சல்மான்
- இந்திய அரசுக்கும் இந்த கொடூரமான தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். (இந்த தாக்குதலை குற்றச்செயல் என கண்டித்துள்ளது.) - ஐக்கிய அரபு அமீரகம் வெளியுறவு அமைச்சகம்
- பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்... இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், குறிப்பாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். - ஈரானியத் தூதரகம் (இந்தியா)