சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:இயல்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 19: வரிசை 19:
==சான்றுகள்==
==சான்றுகள்==
{{Reflist|<ref name="rationalist_diary">பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு</ref><ref name="periyar_arivurai">"பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு</ref>}}
{{Reflist|<ref name="rationalist_diary">பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு</ref><ref name="periyar_arivurai">"பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு</ref>}}

[[பகுப்பு:இயல்கள்]]

16:58, 17 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு என பலகாலமாக பரிந்துரைக்கப்பட்டு வரும் மக்கள் மன பிரிவிணைத்தோற்றம் ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையேயாகும். இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இதனை வெளியேற்ற வழியற்று சமூக அவலங்களை சகித்துக்கொண்டு மக்கள் வாழக்கற்றுக்கொண்டார்கள். அதிலிருந்தும் தோன்றிய அரசுகள் போன்றவற்றால் இது பாதுகாக்கப்டுகிறது.

மேற்கோள்கள்

ஈ. வெ. இராமசாமி

சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்களென்றும், இழி மக்களென்றும் கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள். நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால், அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா? நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப் போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதி நோய்க்கான மூல காரணங்களைக் கண்டறிந்து ஒழிக்கவேண்டும். மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப் படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம் – நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.
  • தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் மே முதல் நாள் ஒன்றே உகந்த தினமாகும்.[1]
  • சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் சமுத்துவமாய் வாழ வேண்டும். அதற்காகப் பலாத்காரம், துவேசம், இம்சை இல்லாமல் பிரச்சாரம் செய்வது குற்றமாகாது.[1]
  • நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்ட இச்சட்டத்தைக் கொளுத்துகிறேன்.[1]
  • ஏழை பணக்காரத் தன்மை ஜாதியை பொறுத்தே அநேகமாய் 100 க்கு 95 பங்காக இருந்து வருகிறது.[1]
  • மதத்தையாவது, ஜாதியையாவது, கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும், அறிவும், தொழிலும், செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது. [2]
  • இன்றைய போராட்டமே சாதியைக் காப்பாற்றுவது என்பதும், சாதியை ஒழிப்பது என்பதும்தான். [3]

சாதி ஒழிப்பு

  • சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்களென்றும், இழி மக்களென்றும் கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள். நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால், அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா? நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப் போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதி நோய்க்கான மூல காரணங்களைக் கண்டறிந்து ஒழிக்கவேண்டும். மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப் படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம் – நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.[4]
  • ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை சட்டப் பூர்வமாகத் தடுக்க வேண்டும்.[1]
  • ஜாதி ஒழிப்பு என்பது நாட்டின் லைசன்ஸ் பெற்ற திருடர்களை, அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பதாகும்.[1]
  • ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.[1]
  • ஜாதிகள் இந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் வரை ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை (இட ஒதுக்கீடு) அரசாங்க அலுவலகங்களில் நிரந்தரமாக இருந்து வர வேண்டும்.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  2. குடிஅரசு 14.9.1930
  3. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுப்பாசிரியர் வே.ஆனைமுத்து, முதல் பதிப்பு, பக்கம் 1630
  4. 4.0 4.1 "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு
"https://ta.wikiquote.org/w/index.php?title=சாதி&oldid=10931" இலிருந்து மீள்விக்கப்பட்டது