ஹியூகோ சாவேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28: வரிசை 28:
<references/>
<references/>
==புற இணைப்புகள்==
==புற இணைப்புகள்==

{{விக்கிப்பீடியா}}{{commonscat|Hugo Chávez}}
*[http://www.presstv.ir/detail.aspx?id=15319&sectionid=3510302 Chavez: Western media try to demonize Iran and other Muslim countries]
[[பகுப்பு: நபர்கள்]] [[பகுப்பு: அரசியல் தலைவர்கள்]]

{{விக்கிப்பீடியா}}
{{commonscat|Hugo Chávez}}
[[பகுப்பு: நபர்கள்]]
[[பகுப்பு: அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:சமூகவியலாளர்கள்]]


[[az:Uqo Çaves]]
[[az:Uqo Çaves]]

10:05, 23 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

படிமம்:HugoChavez1820.jpeg
புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.

ஹியூகோ சாவேஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர். இவர் ஒரு இடதுசாரித் தலைவர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும் வலுவான எதிர்வாதங்களை முன்வைத்த சமகாலத் தலைவர். க்யூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர்.

மேற்கோள்கள்

  • புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வடிவம் பயனற்றதாகிவிட்டது. [1]
  • உலக எண்ணெய் விலை, பல்வேறு நோய்கள், புவி வெப்பமடைதல், ஓசோன் படிமத்தில் ஓட்டை ஆகிய அனைத்தும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. [1]
உலகமயமாக்கலின் (Globalization) விளைவுகள் பற்றிப் பேசும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.
  • பாய்ச்சல் வேக அழிவுத் தன்மையைக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதார மாதிரியை இன்னமும் பொருத்தமானது என்று முட்டாள்தனமாக வலியுறுத்தி மனித இனத்தையே காவு கொடுப்பதானது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல நெறிமுறை மீறிய செயலுமாகும். தற்கொலைக்கு ஒப்பானது.[1]
அடங்கிப்போகும் தன்மையும், அழுது புலம்பும் போக்கும் பயனற்றவை.
  • சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக திறமையான முறையில் போராடுவது இன்றைய அவசரத் தேவையாகும். ஆனால், அதற்காக சர்வதேசச் சட்டங்களை மீறிய நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களைத் தொடுப்பதற்கான சாக்காக அதை நாம் பயன்படுத்தக் கூடாது.[1]
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டிக்கிறார்.
  • மனித சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை நமது கைகள் ஓயக்கூடாது. நமது ஆன்மா தூங்கக் கூடாது. அதற்கான காலம் இதுவேயாகும். [1]
  • ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலை உலகமயம் கொண்டுவரவில்லை. ஆனால், சார்ந்து நிற்பதையே அதிகரித்துள்ளது. செல்வத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக, வறுமைதான் விரிவான முறையில் பரவியிருக்கிறது. [2]
  • சிலர் மட்டுமே செல்வச் செழுமையைத் தொடர்ந்து அனுபவிப்பதையும், பொருட்கள் வீணடிக்கப்படுவதையும் நியாயப்படுத்தும் சில மனிதர்களின் குருட்டுத்தனமும் தெளிவாய்த் தெரிகிறது. [2]
  • உலகமயக் கொள்கையானது அநீதியையும் சமத்துவம் இன்மையையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கை. [2]
  • அடங்கிப்போகும் தன்மையும், அழுது புலம்பும் போக்கும் பயனற்றவை. [2]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 16-09-2005 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது.
  2. 2.0 2.1 2.2 2.3 01.03.2004 அன்று நடைபெற்ற G15 நாடுகளின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

புற இணைப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹியூகோ_சாவேஸ்&oldid=8097" இலிருந்து மீள்விக்கப்பட்டது