கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4: வரிசை 4:
[[படிமம்:NASA child bubble exploration.jpg|thumbnail|வலது|நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன]]
[[படிமம்:NASA child bubble exploration.jpg|thumbnail|வலது|நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன]]
* விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ '''பழமொழி'''
* விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ '''பழமொழி'''

===இலக்கியங்களில் கனவுகள் பற்றி===
* இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது. ~ '''[[ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்]]'''
* இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது. ~ '''[[ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்]]'''
* நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன. ~ '''[[குள்ளச் சித்தன் சரித்திரம்]]'''
* நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன. ~ '''[[குள்ளச் சித்தன் சரித்திரம்]]'''

07:02, 18 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

கனவு (dream) என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது அனைத்து பாலூட்டிகளிலும் ஏற்படக்கூடிய விளைவாகும்.

மேற்கோள்கள்

நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன
  • விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ பழமொழி

இலக்கியங்களில் கனவுகள் பற்றி

உளவியல் அறிஞர்களின் பார்வையில் கனவுகள்

  • நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சினையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாகக் கனவு உள்ளது. ~ பர்டாக்
  • நாம் சொன்னது, செய்தது, செய்ய நினைத்ததும் தான் கனவில் வருகின்றன. ~ மோரி
  • கனவு காண்பவரின் வயது, வாழ்முறை, அனுபவம், அவர் ஆனா பெண்ணா போன்றவை தான் கனவின் உள் விஷயங்களைத் தீர்மானிக்கின்றன. ~ ஜென்ஸன்
  • கனவானது நனவு வாழ்வோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் நனவு வாழ்வுக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத விஷயங்களையும் காட்ட வல்லது. ~ ஹில்டெப்ரான்

சிக்மண்ட் பிராய்ட்

  • கனவுகள், பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை.
  • சின்ன விசயங்களை கண்,காது,மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.
  • கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கனவு&oldid=8813" இலிருந்து மீள்விக்கப்பட்டது