மிகெல் தே செர்வாந்தேஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
Miguel de Cervantes (circa 1600)

மிகேல் தே சேர்வான்டிசு சாவேத்ரா (Miguel de Cervantes, செப்தெம்பர் 29, 1547 – ஏப்ரில் 22, 1616) ஒரு எசுப்பானிய புதின எழுத்தாளரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். முதலாவது தற்காலப் புதினம் எனச் சிலரால் கூறப்படும் டான் கிஃகோட்டி என்னும் இவரது புதினம் மேல் நாட்டு இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்தது எனவும், உலகின் மிகச் சிறந்த புதினங்களுள் ஒன்று எனவும் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

அழகு[தொகு]

  • எல்லா அழகும் காதலைத் தூண்டுவதில்லை. சில அழகிகள் கண்ணுக்கு இனிமையாய்த் தோன்றுவரே ஒழிய அன்புசர்சிகளை எழுப்புவதில்லை.

இரக்கம்[தொகு]

  • கடவுளுடைய சக்திகள் யாவும் ஒன்றுபோல் சமமாக இருந்த போதிலும், அவருடைய நீதியைப் பார்க்கினும் இரக்கம் அதிகப் பிரகாசமாக விளங்குகின்றது.[1]

செயல்[தொகு]

  • நல்ல செயல்கள் நம்மை உயர்த்துகின்றன. நாம் நம் செயல்களின் புதல்வர்களாய் இருக்கிறோம்.[2]

சோகம்[தொகு]

  • துக்கம் மனிதர்களுக்காக ஏற்பட்டது. விலங்குகளுக்காக அன்று: ஆனால், மனிதர் அதிகமாய்த் துக்கம் கொண்டாடினால், அவர்கள் விலங்குகளுக்கு மேலல்லர்.[3]

நூலாசிரியர்[தொகு]

  • தந்தையார் தாயார் எவரும் தம் குழந்தைகள் விகாரமாக இருப்பதாக எண்ணுவதில்லை; தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் இந்தக் குணம், உள்ளத்தால் படைக்கும் படைப்புகளில் மேலும் அதிகமாயிருக்கும்.[4]

பழமொழிகள்[தொகு]

  • அனுபவம் விஞ்ஞானங்களுக்கு எல்லாம் தாய் பழமொழிகள் அந்த அனுபவத்திலிருந்து பெறப்பட்டவை. பழமொழிகளில் உண்மையாக இல்லாதவை மிகச் சிலவே இருக்கும்.[5]
  • நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சிறுவாக்கியங்கள் பழமொழிகள்.[5]

பொறாமை[தொகு]

  • பொமையின் கண்களுக்குச் சிறு பொருள்களெல்லாம் மிகப் பெரியவைகளாகவும். குள்ளர்கள் பெரிய அசுரர்களாகவும், சந்தேகங்களெல்லாம் உண்மையாகவும் தோன்றும்.[6]

மரியாதை[தொகு]

  • மரியாதையாகப் பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190-191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 200-201. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 243-244. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. 5.0 5.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 263-264. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 290-291. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 297-298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மிகெல்_தே_செர்வாந்தேஸ்&oldid=38139" இலிருந்து மீள்விக்கப்பட்டது