காட்பாதர் (அறிவுதந்தை)
Appearance
தாதா விட்டோ கார்லியோன்
[தொகு]- [சன்னி கொல்லபட்டப்பின், டோம் ஹகேனிடம்] விசாரணைகள் செய்யப்பட வேண்டாம். பழிவாங்கும் செயல்கள் வேண்டாம். ஐந்து குடும்பங்களின் தலைவர்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய். இப்போர் இப்பொழுதே நிற்க வேண்டும்.
- [ஜாக் வோல்ட்ஸ்-ஐ பற்றி ஜோன்னி போண்டனிடம்] அவன் மறுக்கமுடியாத வாய்ப்பை நான் தர போகிறேன்.
- குறிப்பு: அமெரிக்க திரைப்பட கல்லூரி தயாரித்த பட்டியலில் அமெரிக்க திரைப்படத்தின் சிறந்த நூறு படவசனங்களில் , மேற்கூறிய வசனம் இரண்டாம் இடத்தை பெற்றது.
மைக்கேல் கார்லியோன்
[தொகு]- உன் எதிரிகளை வெறுக்காதே. அது உன் திறனாய்வை மந்தமாக்கும்.
போனாசெரா
[தொகு]- நான் அமெரிக்காவை நம்புகிறேன். அமெரிக்கா என்னை பணக்காரனாக மாற்றியது. என் மகளை அமெரிக்க கலாச்சாரத்தின்ப்படி வளர்த்தேன். அவளுக்கு சுதந்திரம் அளித்தேன், ஆனால் குடும்பத்தின் கெளரவம் கலங்கபடாதவாறு நடந்துகொள்ள கற்றுகொடுத்தேன். அவள் ஒருவனுடன் பழகினாள், அவன் இத்தாலியன் அல்ல. அவனுடன் திரையரங்குகள் சென்றால் ;இரவு வெகு நேரம் அவனுடன் தங்கினாள். நான் எதற்கும் கண்டிக்கவில்லை . இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அவன் தன இன்னொரு நண்பனுடன் அவளை ஊர்சுற்ற அழைத்துசென்றான். அவளை மது அருந்த வைத்தார்கள். பின்பு,அவளை அடைய முயற்சித்தார்கள். அவள் எதிர்த்தாள் . அவள் மதிப்பை தக்க வைத்து கொண்டாள் . அதனால், அவளை ஒரு மிருகம் போல் அடித்து உதைத்தனர். அவளை பார்க்க நான் மருத்துவமனை சென்றபொழுது அவள் மூக்கு உடைந்திருந்தது. அவளது தாடை நொறுங்கியிருந்தது.அதை கம்பியினால் இழுத்து கட்டியிருந்தார்கள் . வலியினால் அழ தெம்பு இல்லாமல் கிடந்தாள் . ஆனால் நான் அழுதேன். எதற்காக? அந்த அழகிய பெண் என் வாழ்வின் ஒளி . இனி அவள் அழகாக முடியாது, நானும் நல்ல அமெரிக்கன் போல, காவல்துறையிடம் முறையிட்டேன். அவ்விரண்டு இளைஞர்களையும் கூண்டில் ஏற்றினேன். அவர்களை மூன்றாண்டு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் - பிறகு ரத்து செய்தார். தண்டனை ரத்து! அத்தினமே அவர்கள் இருவரும் விடுதலை ஆனார்கள். நான் நீதிமன்றத்தில் முட்டாள் போல் நின்றுகொண்டிருந்தேன்.அந்த இரண்டு இளைஞர்களும் என்னை பார்த்து சிரித்தனர். அப்பொழுது என் மனைவியிடம் கூறினேன், நீதிக்கு, நாம் தாதா கோர்லியோனிடம்தான் செல்ல வேண்டும்.
வசனங்கள்
[தொகு]- தாதா கார்லியோன்: ஏன் முதலில் காவல் துறையிடம் சென்றீர்கள்? ஏன் முதலில் என்னிடம் வரவில்லை?
- போனாசெரா: என்னிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்? எதுவானும் சொல்லுங்கள், ஆனால் நான் செய்ய வேண்டுவதை செய்யுங்கள்.
- தாதா கார்லியோன் : அது என்ன?[ தாதாவின் காதில் போனாசெரா முணுமுணுக்கிறார்] அது என்னால் செய்ய முடியாது.
- போனாசெரா : நீங்கள் என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்.
- தாதா கார்லியோன் : நாம் ஒருவரை ஒருவர் பல்லாண்டுகளாக அறிவோம், ஆனால் உதவி என்றோ அல்ல ஆலோசனை என்றோ என்னிடம் இன்று தான் முதல் தடவையாக வந்திருக்கிறாய்.உன் ஒரே குழந்தைக்கு என் மனைவி அறிவுத்தாயாக இருந்தபொழுதும், என்னை உன் வீட்டுக்கு தேநீர் அருந்த இதுவரை அழைத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. வெளிப்படையாக இருப்போமே. என் நட்பை நீ விரும்பவில்லை. என்னிடம் கடன்பட்டு இருக்க நீ அஞ்சினாய் .
- போனாசெரா : நான் பிரச்சனையில் சிக்க விரும்பியதில்லை.
- தாதா கார்லியோன் : புரிகிறது. அமெரிக்காவில் சொர்கம் கண்டாய் , நல்ல வேலை, நல்ல வாழக்கை கிடைத்தது. நீதிமன்றங்கள் இருந்தன மற்றும் காவல்த்துறை உன்னை காப்பாற்றியது. ஆதலால் , என்னை போன்றவர்களின் நட்பு அப்பொழுது அவசியமானதாக இல்லை. ஆனால்,ம்ம்..இப்பொழுது என்னிடம் வந்து ," தாதா கார்லியோன்,நீதி கொடு" என்கிறாய். ஆனால், நீ என்னை மதித்து கேட்கவில்லை. என்னை அறிவுதந்தையாக நீ கருதவில்லை. பதிலாக, என் மகள் திருமணத்தன்று என் வீட்டுக்கு வந்து,என்னை பணத்துக்காக கொலை செய்ய சொல்கிறாய்.
- போனாசெரா : நான் நீதிக்காக கேட்கிறேன்.
- தாதா கார்லியோன்: இது அநீதி. உன் மகள் உயிருடன் இருக்கிறாள்.
- போனாசெரா : என் மகள் அவதிபடுவதுபோல்,அவர்களும் படட்டும். நான் உங்களுக்கு எவ்வளவு பணம் தரணும்?
- தாதா கார்லியோன் : போனாசெரா,போனாசெரா! நான் உனக்கு என்ன தவறு இழைத்தேன் ,என்னை ஏன் இவ்வளவு மரியாதைக்குறைவாக நடத்துகிறாய்? நீ என்னிடம் நட்பு பாராட்ட வந்திருந்தால்,உன் மகளை காயபடுத்திய அந்த கழிசு இந்நேரம் அவதிப்பட்டு கொண்டிருக்கும் . உன்னை போன்ற நேர்மையானவர்களுக்கு எதிரிகள் ஆனவர்கள், எனக்கும் எதிரிகளே. பிறகு,உன்னை கண்டு அவர்கள் அஞ்சுவார்கள்.
- போனாசெரா: அறிவுதந்தையே! என் நண்பன் ஆகுங்கள்.
- [தாதா தொழுயர்த்துகிறார், போனாசெரா தாதா முன் மண்டியிட்டு,அவர் கரத்தை முத்தமிடுகிறார்]
- தாதா கார்லியோன்: நல்லது. ஒரு நாள், அந்நாள் வராமலும் போகலாம், எனக்கு வேலை செய்ய உன்னை கூப்பிடுவேன். அன்று வரை - இந்நீதியை என் மகள் திருமண நாளன்று நான் உனக்கு தரும் அன்பளிப்பாக ஏற்றுகொள்.
- போனாசெரா: நன்றி,அறிவுதந்தையே!
- தாதா கார்லியோன்: இதை,ம்ம், க்லமன்சாவிடம் ஒப்படை,ப்ரேகோ. எனக்கு நம்பகமான ஆட்கள் வேண்டும். இந்த ஈமச் சடங்கு மேற்பார்வையாளர் நினைப்பதுபோல் நாம் ஒன்றும் கொலையாட்கள் அல்ல.
வெளி இணைப்புக்கள்
[தொகு]
- The Godfather quotes at the Internet Movie Database
- The Godfather at Rotten Tomatoes
- The Godfather on Filmsite.org