சத்திய சாயிபாபா
Appearance
மேற்கோள்கள்:
[தொகு]மேற்கோள்:01.அன்பு
[தொகு]- அன்பால் நாளினைத் தொடங்கிடுக;
- அன்பால் நாளும் வாழ்ந்திடுக;
- அன்பால் நாளினை நிரப்பிடுக;
- அன்பால் நாளினைச் செலவழிக்க;
- அன்பால் நாளினை நிறைவு செய்க!
- "Start the day with Love;
- Live the day with Love;
- Fill the day with Love;
- Spend the day with Love; and,
- End the day with LOVE!"
மேற்கோள்:02.
[தொகு]- ஒரே ஒரு சாதிதான் உண்டு, அதுதான் மனிதச்சாதி;
- ஒரே ஒரு மதம்தான் உண்டு, அதுதான் அன்பு எனும் மதம்;
- ஒரே ஒரு மொழிதான் உண்டு, அதுதான் இதயம் பேசும்மொழி;
- ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, அவர் எங்கும் நிறைந்தவர்!
- "There is only one caste, the caste of Humanity;
- There is only one religiln, the religion of Love;
- There is only one language, the language of the Heart;
- There is only one God and He is Omnipresent!"
மேற்கோள்:03.
[தொகு]- அன்பு `எண்ணம்' ஆகஆனால் அதுதான் உண்மை;
- அன்பு `செயல்` ஆகஆனால் அதுதான் அறம்(தருமம்);
- அன்பு `உணர்வு` ஆகஆனால் அதுதான் அமைதி;
- அன்பு `புரிதல்` ஆகஆனால் அதுதான் அகிம்சை(இன்னாசெய்யாமை).
- "Love as Thought is Truth,
- Love as Action is Right Conduct,
- Love as Feeling is Peace,
- Love as Understanding is Non-violence.
மேற்கோள்:04
[தொகு]- அன்பு என்பதன் மொத்தஉருவமே நான்; அன்பே என்னுடைய 'கருவி'யாகும்.
- "I am the embodiment of Love; Love is my instrument."
மேற்கோள்:05
[தொகு]- என்னுடைய மிகப்பெருஞ்சொத்து அன்பு என்பதே! மக்கள் என்னுடைய சக்திகள் பற்றியும்,
- நான் செய்யும் அற்புதங்கள் பற்றியும் பேசுகின்றனர்; ஆனால்,என் மிகப்பெரும் அற்புதம்,
- - என் அன்புதான்!
- "My greatest wealth is Love. People speak about My powers and My miracles, but
- My Love is My greatest Miracle."
மேற்கோள்:06
[தொகு]- கடவுள்மேல் ஒருவன்கொண்ட அன்பு(பக்தி) என்பது,
- நிச்சயம் மனிதனுக்கான அன்பாக மலரவேண்டும்;
- அது தொண்டு அல்லது சேவை எனத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- என்வாழ்வே நான்தரும் செய்தி, நான்தரும் செய்தி அன்பு என்பதே!
- "Love for God must be manifested as Love for man, and Love for man must express itself
- as Service. My Life is My Message and My Message is Love."
மேற்கோள்:07
[தொகு]- அன்பு இதயத்தினால்தான் பார்க்கும்,அது கண்களைக்கொண்டு பார்ப்பதில்லை:
- அது காதினால் கேட்பதில்லை, சமநிலையுடைய இதயத்தினால் கேட்கும்.
- அது நாவினால் பேசாது, ஆனால் கருணையினால் பேசும்.
- "Love sees with the heart and not with the eye. It listens, not through the ears,
- but by the tranquility of the heart. It speaks, not with the tongue, but out of compassion."
மேற்கோள்: 08.உண்மையான உறவினர்
[தொகு]- உண்மையே உன் தாய்!
- மெய்யறிவே உன் தந்தை;
- தருமமே உன் உடன்பிறந்தான்;
- கருணைதான் நண்பனாவான்;
- அமைதியே அருமை மனைவி!
- பொறுமைதான் உன் மைந்தன்;
- இந்த அறுவர்தாம் ஒருவருடைய உண்மையான உறவினர் ஆவார்!
மேற்கோள்: 09 கெட்ட தாய்
[தொகு]- இந்த உலகில் கெட்ட மகன்கள் இருக்கலாம்; ஆனால், கெட்ட அன்னைமார்கள் இல்லவே இல்லை!
மேற்கோள்: 10 தாய்
[தொகு]- 'தாய்' என்ற பாத்திரமாய்ப் பெண்கள் பங்கேற்கும்போது, ஒருபெண்ணின் வலிமை(பலம்) உச்சமாய் வெளிப்படுகின்றது.
- தாய் என்பவள், இந்தப் பிரபஞ்சத்தாயின் அடையாளம்! தந்தை என்பவர், தெய்வீகத்தலைவராம் தந்தையின் அடையாளம் ஆவார்.
மேற்கோள்: 11 சொர்க்கமும், நரகமும்
[தொகு]- அன்பும், புரிந்துணர்வும் ஆட்சிசெய்தால், அந்த இல்லமே சொர்க்கம் ஆகும்!
- ஒருவரை ஒருவர் நம்பாமையும், பகைமையும் இல்லத்தை நரகம் ஆக்கும்!
மேற்கோள்: 12 ஒளிதருவது
[தொகு]- இரவில் உலகிற்கு ஒளிகொடுப்பது நிலவு!
- பகலில் ஒளிகொடுப்பது ஞாயிறு, சூரியன்!
- மூன்று உலகிற்கும் ஒளிதருவது அறமே, தருமமே!
- ஒரு குடும்பத்திற்கு ஒளிதருபவன், கலங்கரை விளக்கம் ஒழுக்கம் நிறைந்த மகனே!
மேற்கோள்: 13 இல்லறத்தான்
[தொகு]மேற்கோள்: 14 உணவே அடிப்படை
[தொகு]- உணவு எப்படியோ அப்படித்தான் உள்ளம்;
- உள்ளம் எப்படியோ அப்படித்தான் எண்ணம்;
- எண்ணம் எப்படியோ அப்படித்தான் ஒழுக்கம்;
- ஒழுக்கம் எப்படியோ அப்படித்தான் உடல்நலம்!
மேற்கோள்: 15 நல்ல மருந்து
[தொகு]- பசிநோய்க்கு மருந்தேதான் உணவாகும்!
- தாகம்எனும் நோய்தீரத் தண்ணீர்தான் மருந்தாகும்!
- ஆசை எனும் நோயதற்கு மெய்யறிவே மருந்தாகும்!
- ஐயம், ஏமாற்றம், அடிக்கடி வரும் தயக்கம்
- இம்மூன்று நோய்தீர்க்கும் இணையில்லா மருந்துஎதுவாம்?
- அம்மருந்தே 'சேவை' எனும் தொண்டாகும்!
- அமைதிதனை அழிக்கின்ற 'அசாந்தி' எனும்ஓர் (அல்சாந்தி=அசாந்தி)
- தொற்றுநோய் தீர்க்கின்ற தொல்மருந்து
- புகழ்பாடும் 'போற்றிசை'யே! (பஜனை)
- இறைவனின் புகழ்பாடும் போற்றிசையே!
- இடையறாப் பிறவிநோய்க்கு ஏற்றதொரு திருமருந்து
- இறைவன்தான்! கடவுள்தான்! இதயத்தில்
- உறைகின்ற இறைவன்தான் நல்மருந்து!
மேற்கோள்: 16
[தொகு]- 'தன்-நம்பிக்கை' என்பதுதான் அடித்தளம்;
- 'தன்-நிறைவு' என்பதுதான் சுவர்;
- 'தன்னல மறுப்பே' கூரை ஆகும்;
- 'தன்னை உணர்தலே' வாழ்க்கை என்க!
வெளி இணைப்புக்கள்
[தொகு]
- International Sri Sathya Sai Organization
- Introduction to Sathya Sai Baba
- Sri Sathya Sai Central Trust
- Sri Sathya Sai Books & Publication Trust
- Bhagwan Shri Sathya Sai Baba
- Who is Sri Sathya Sai Baba
- Discourses by Sathya Sai Baba
- Sai Streaming Videos
- Sai Baba of India
- Thought for the day
- Sai Baba Website
- Radio Sai Global Harmony
- Avatar of our days — Sathya Sai Baba
- Sathya Sai Baba
- Sai Sathya Sai