உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபாகரன்

விக்கிமேற்கோள் இலிருந்து
(தேசியத்தலைவர் பிரபாகரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் - இது இவரின் கூற்றாகும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள், உயர்ந்தவர்கள்.
  • ஒன்று நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?
  • அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக்கொடு!
  • யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான் (சீருடை). அதனால்தான் எப்பொழுதும் இதிலேயே இருக்கிறேன்.
  • உயிர் பறிக்கும் சயனைடுதான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்.
  • இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.
  • நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்க வேண்டும்.
  • ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்!
  • தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது.
  • தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கருணன். அவனை எப்பொழுதும் நினைப்பேன்.
  • தமிழீழ இலட்சியத்திலிருந்து நான் பின்வாங்கினால் என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்!
  • வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்.
  • செய் அல்லது செத்துமடி.
  • வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரபாகரன்&oldid=17743" இலிருந்து மீள்விக்கப்பட்டது