முகம்மது அலி
Appearance
முகம்மது அலி (Muhammad Ali இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr; பிறப்பு: ஜனவரி 17, 1942, இறப்பு:சூன் 3, 2016), ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மற்றும் மூன்று முறை மிகு எடை உலக வெற்றி வீரர் ஆவார். உலகிலயே தலைசிறந்த மிகு எடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதபடுபவர் முகம்மது அலி.
மேற்கோள்கள்
[தொகு]- வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடம்தான் அதிமுக்கியம்.
- பட்டாம்பூச்சியைப் போல மிதந்து, தேனீயைப்போல கொட்டுங்கள்!
- எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை. பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த கொலை,அப்பாவிகளை கொல்லுதல்,அவர்களை எரித்தல் ஆகியவற்றை என்னால் செய்ய முடியாது. ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டுச் சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை ஏன் செலுத்த வேண்டும் ? இங்கே என் ஊரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு,மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போகவேண்டும் ? இதுவே இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் மற்றும் காலம்
- வியட்நாம் போரில் கட்டாய ராணுவ சேவைக்குப் பணித்தபோது மறுத்துப் பேசியது.
- பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை அணிய விரும்பவில்லை
- அமெரிக்காவில் கருப்பர்களுக்கு எதிரான பிரிவினைவாத்ததால் தனது ஒலிம்பிக் தங்கப் பதகத்தை நதியில் வீசி எரிந்ததைப் பற்றி கூறியது.[1]
- மனிதர்களை குத்துவதை, உதைப்பதை விட மகிழ்ச்சிகரமான காரியங்கள் அதிகம் இருப்பதால், நான் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
- ஒரு மனிதன் இருபது வயதில் இந்த உலகத்தை எப்படிப் பார்த்தானோ, அதே போலவே ஐம்பது வயதிலும் பார்த்தால், அவன் முப்பது வருடங்களை வீணாகக் கழித்திருக்கிறான் என்று பொருள்.[2]
- இது வெறும் வேலை அவ்வளவுதான். புற்கள் வளர்கின்றன, பறவைகள் பறக்கின்றன. நான் மனிதர்களை அடிக்கிறேன்.[3]
- வாழ்க்கை மிகவும் குறுகியது. விரைவில் முதுமை அடைந்து விடுவோம். மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள்.
- நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட வேண்டும்.[4]
- என்னைப் போலவே என்மகனும் குத்துச்சண்டை வீரனாவதை நான் விரும்பவில்லை. ஆனல் அவன் விருப்பம் இதில் இருக்குமானல் நான் ஒன்றும் செய்ய முடியாது. கல்வியாளனாக அவன் விளங்க வேண்டும் என்பது என் ஆசை. நான் முறையான கல்வியைப் பெறவில்லை. அதற்காக இப்பொழுது நான் கவலைப்படவில்லை. உலகிற்கு நான் படித்த மனிதனுகவே தோன்றுகிறேன். இப்பொழுது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமானல் பள்ளிக்கூடத்திற்குப் போவதை விரும்பி ஏற்றுக் கொள்வேன்.[5]
நபர் பற்றிய மேற்கோள்கள்
[தொகு]- தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகமது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது தொழிற்குணத்திற்கு நேர் எதிராக அமைதியை நாடியவர், சமாதானத்தை விரும்பிய அற்புத மனிதர்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 நாக்அவுட் நாயகன் முகமது அலி ஒலிம்பிக் தங்க பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்?. விகடன் (4 சூன் 2016). Retrieved on 4 சூன் 2016.
- ↑ Playboy magazine (November 1975) பேட்டியில்
- ↑ As quoted in "Ali's Quotes" at BBC Sport : Boxing (17 January 2007)
- ↑ அதிஷா (15 சூன் 2016). "இரும்புக்கை மாயாவி!". ஆனந்த விகடன்: 52-55.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.