வாரன் பபெட்
Appearance
(வாரன் பஃபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 30. 1930) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.
இவரது சொற்கள்
[தொகு]- விலை என்பது உங்களால் கொடுக்கப்படுவது. மதிப்பு என்பது உங்களால் பெறப்படுவது
- எதை விவேகமானவர்கள் தொடக்கத்தில் செய்கிறார்களோ, அதை முட்டாள்கள் இறுதியில் செய்கிறார்கள்.
- ஒவ்வொரு துறவிக்கும் ஒரு கடந்தகாலம் உள்ளது. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது.
- யாரோ ஒருவர் இன்று நிழலில் அமர்ந்திருக்கிறார் ஏனெனில் யாரோ ஒருவரால் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு மரம் நடப்பட்டுள்ளது.
- நான் பணக்காரனாக இருக்கப்போகிறேன் என்பது எனக்கு எப்போதும் தெரியும். அதில் ஒரு நிமிடம் கூட எப்போதும் எனக்கு சந்தேகம் இருந்ததில்லை.
- இன்றைய முதலீட்டாளரால் நேற்றைய வளர்ச்சியிலிருந்து லாபமடைய முடியாது.
- இழக்கக் கூடாது என்பது முதல் விதி. முதல் விதியை மறக்கக் கூடாது என்பது இரண்டாவது விதி.
- நேர்மையானது மிகவும் விலை உயர்ந்த பரிசு, மலிவானவர்களிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்.
- நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறியாமல் இருப்பதிலிருந்து வருவது இடர்பாடு.
- உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை நீங்கள் வாங்கினால், விரைவில் உங்களுக்கு தேவையான பொருட்களை விற்க நேரிடும்.
- செலவிற்கு பிறகு இருப்பதை சேமிக்காதீர்கள்; மாறாக, சேமிப்பிற்கு பிறகு இருப்பதை செலவிடுங்கள்.
- நற்பெயரை வாங்குவதற்கு 20 ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும்; அதை இழப்பதற்கு ஐந்து நிமிடங்கள் போதும். -- வாரன் பஃபே, உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர்.
வெளி இணைப்புக்கள
[தொகு]
- Berkshire Hathaway, Buffett's company
- Warren Buffett Quotes, The Buffett