சில்வியா பிளாத்

விக்கிமேற்கோள் இலிருந்து

சில்வியா பிளாத் (Sylvia Plath, அக்டோபர் 27, 1932 - பிப்ரவரி 11, 1963) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

Sylvia Plath signature
  • மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாக செய்கிறேன்.
  • அன்பால் அல்லது வெறுப்பால் மறைக்கப் படாமல் நான் பார்க்கும் எல்லாவற்றையும் அப்படியே உடனே விழுங்குகிறேன்.[1]
  • ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்.
  • தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.[2]
  • அவர் தந்தையின் மரண செய்தியைச் சொன்னபோது,
இனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன்.
  • எந்த மகத்துவமும் இறங்கி அருளவில்லை.

சான்றுகள்[தொகு]

  1. "Mirror" எனும் சில்வியா பிளாத்தின் கவிதையில் இருந்து
  2. "மீண்டும் மீண்டும் மரணத்தை நான் ஏன் நேசித்தேன்?" எனும் குறிப்பில் இருந்து
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சில்வியா_பிளாத்&oldid=38044" இலிருந்து மீள்விக்கப்பட்டது