மா சே துங்

விக்கிமேற்கோள் இலிருந்து
மா சே துங் (1959)

மா சே துங் (மாவ் ட்சேடுங் : Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்.
  • * துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும். —மா சே துங் (1936)[1]
  • மரம் அமைதியைத்தான் விரும்புகிறது ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை.
  • புரட்சி என்பது மாலை நேர விருந்துண்ணலோ பூத்தையல் வேலைப்பாடோ அல்ல. அது அவ்வளவு இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது.
  • ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும். இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது. [2]
  • ஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழிநடத்துவது சாத்தியாமாகாது. [3]
  • எதிரி தானாகவே அழியமாட்டான். [4]
  • உலகிலுள்ள யாவும் எதிர்மறைகளின் ஒற்றுமையே ஆகும்.
  • எந்தக் காலத்திலும் சீனா தோற்கடிக்கப் பெற்றது கிடையாது. யாராலும் அதைத் தோற்கடிக்க முடியாது. போர் வந்து விட்டால், முப்பது கோடிப் பேரை பலி கொடுத்து மீண்டும் உலகில் பெரிய நாடாய் இருக்கக் கூடிய அளவுக்கு எண்ணிக்கை பலம் சீனாவுக்கு உண்டு.[5]

புற இணைப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. [1]
  3. 'தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் பாத்திரம்' என்னும் நூலில்
  4. 'புரட்சியை இறுதிவரை நடத்துக!' அறிக்கையில் இருந்து
  5. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

மேலதிக மூலங்கள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=மா_சே_துங்&oldid=37105" இலிருந்து மீள்விக்கப்பட்டது