உள்ளடக்கத்துக்குச் செல்

லியோ டால்ஸ்டாய்

விக்கிமேற்கோள் இலிருந்து
1908ல் லியோ டால்ஸ்டாயின் வண்ண ஓவியம்

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy, செப்டம்பர் 9 [யூ.நா. ஆகஸ்ட் 28] 1828 – நவம்பர் 20 [யூ.நா. நவம்பர் 7] 1910) (ரஷ்ய மொழி: Лев Никола́евич Толсто́й, உச்சரிப்பு: லியேவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய்), ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவர் புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவரது மிகச் சிறந்த ஆக்கங்களான போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகியவை, 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையை விபரிப்பதில் உண்மைவாதப் புனைகதைகளின் உயர்நிலையைக் காட்டுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  • சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன; துக்ககரமான குடும்பம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றது.
  • சந்தோஷமான தருணங்களை பிடித்து கொள், காதலி, காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை, மற்றவை எல்லாம் மாயை.நாம் ஆர்வம்கொள்ளும் ஒரே விஷயம் இது தான்.
  • காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.
  • நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும் தேம்பிக்கலங்குதலும், முட்டி மோதிக்கொள்ளுதலும், இழப்புக்குள்ளாதலும், தொடங்குதலும் தூக்கியெறிதலும், மீண்டும் தொடங்குதலும் மீண்டும் தூக்கியெறிதலும் தவிர்க்க இயலாதவை. நிம்மதி ஆன்மாவின் இழிநிலை.
  • எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னைப் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை.
  • ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
  • இறைவனே! என்னிடம் தாழ்மையை வேண்டுகிறீர். ஆனால் நான் இன்னும் அந்த உயர்ந்த பொருளை எட்டவில்லை.[1]

யாருக்கு நாம் அன்பு செய்கிறோமோ, அவரை நேசிக்கிறோம். யாருக்குத் தீமை செய்கிறோமோ அவரை வெறுக்கிறோம்.[2]

  • அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க.[3]
  • பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாய் இயக்கத்தக்கது அதுவே. ஆனால், ஐயோ, நாம் அதைத்தான் நம்புவதில்லையே![4]
  • அதிகமான ஜனங்கள் நம்புகிறார்களா? அப்படியானால் அவ்வளவுக் கவ்வளவு அதிக ஜாக்கிரதையாக அந்த விஷயத்தை ஆராய்தல் அவசியம்.[5]
  • கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை.[6]
  • 'அவன்' என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது.[6]
  • திருமணத்தைப் புனிதமாக்குவது காதல் ஒன்றுதான்.
  • சமயத்தைப் பற்றிச் சிந்தியாதவன், தான் பிறந்த சமயமே உண்மைச் சமயம் என்று எண்ணிக் கொள்கிறான்.[7]
  • ஆசிரியன் தன் நூலில் தன் ஆன்மாவைக் காட்டும் அளவே அவன் நமக்கு அவசியம் ஆவான். [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம். நூல் 111- 112. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  3. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. 6.0 6.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=லியோ_டால்ஸ்டாய்&oldid=37458" இலிருந்து மீள்விக்கப்பட்டது