உள்ளடக்கத்துக்குச் செல்

அடால்ப் இட்லர்

விக்கிமேற்கோள் இலிருந்து
(அடால்ஃப் ஹிட்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்.

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20] 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • புகழை மறந்தாலும்... நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது இன்னொரு முறை.... உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.
  • எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்.
  • எனது சொத்துக்கள் அனைத்தும் எனக்கு பின்பு என் கட்சிக்கு சேர வேண்டும். கட்சி அழிந்து விட்டால் என் நாட்டுக்குச் சேர வேண்டும்.
  • நாங்கள் இறந்த பிறகு எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ இந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும் ஈவாவையும் உடனே எரித்து விட வேண்டும்.
  • ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும் பாசமும்தான் என்னை வழிநடத்தின .கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன்.
  • இந்தப் போருக்கு நான்தான் மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது, ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன்.
  • இந்தப்போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட பிரம்மாண்டமான மாளிகைகள், தரைமட்டமாக்கப்பட்ட கலையம்சம் மிக்க நினைவுச்சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.
  • இந்த போருக்கு காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜேர்மானிய இளைஞனுக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்ப்படும்.
  • நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம்.நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி ,பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.எங்கள் அறையில் உள்ள கடிதங்கள்,டைரிகள்,என் உடைகள் என் பேனா,கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ,ஒன்று விடாமல் எரித்து விடுங்கள்.
  • நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் தோல்வி அடைந்தால் அதைப்பற்றி விளக்க நீங்கள் அங்கே இருக்கக் கூடாது.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


காணொளிகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=அடால்ப்_இட்லர்&oldid=10505" இலிருந்து மீள்விக்கப்பட்டது