அற்புதம்
Appearance
(அற்புதங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அற்புதம் (Miracle) என்பது இயற்கை அல்லது அறிவியல் விதிகளால் விவரிக்க முடியாத ஒரு நிகழ்வு. இத்தகைய நிகழ்வுக்கு காரணமாக ஒரு அமானுஷ்ய சக்தி (குறிப்பாக தெய்வம்), மந்திரம், மாந்திரீகம், ஒரு துறவி அல்லது ஒரு மதத் தலைவராக இருப்பதாக கருதப்படலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- அற்புதம் எதுவும் அதைப் பார்க்கிறவருக்குப் புரியாததாலும், இயற்கையான முறைக்கு மாறாக இருப்பதாலும். அது தெய்விகமானது என்று கருதப்பெறுகின்றது. - லாக்[1]
- ஆத்திகர் ஒவ்வொருவரும் ஆண்டவரின் அற்புதம். - பெய்லி[1]
- முற்கால உலகில் அறிலைப் புகட்டுவதற்கு அற்புதங்கள் பயன்பட்டு வந்தன. எனவே. அவை தெய்விகமாயிருந்தன. ஆனால், அவைகளால் ஏற்படவேண்டிய பயன்கள் முடிந்துவிட்ட பிறகும். இன்னும் நம்மிடம் அற்புதங்கள் இருப்பதாகப் பாவனை செய்தல் மடமையாகும். - பீச்செர்[1]
- படைக்கப்பெற்ற எவருடைய சக்திக்கும் மேலான ஒரு சக்தியின் வேலைதான் அற்புதம் என்பது. ஆகவே, அது தெய்விகச் சர்வ வல்லமையின் பயனாக விளைவது. -ஸவுக்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-79. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.