கருணாநிதி

விக்கிமேற்கோள் இலிருந்து
(கலைஞர் கருணாநிதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முத்துவேல் கருணாநிதி, (M. Karunanidhi, இயற் பெயர்: தட்சிணாமூர்த்தி, பிறப்பு: ஜூன் 3, 1924 இறப்பு:ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத் முன்னாள் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக கலைஞர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டார்.இவர் தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார். .'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்குக் 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  • மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!
  • வீரன் சாவதே இல்லை... கோழை வாழ்வதே இல்லை.[1]
  • தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்.
  • கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக் கூடாது.
  • வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
  • நான், நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லும் போது தான் உதடுகள் கூட ஒட்டும்.
  • மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கருணாநிதி&oldid=38154" இலிருந்து மீள்விக்கப்பட்டது