எட்வார்ட் கிப்பன்
Appearance
(கிப்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எட்வார்ட் கிப்பன் அல்லது எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon, பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1794) ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கிப்பன் எழுதிய ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் (The History of the Decline and Fall of the Roman Empire) உலகின் பெரும் வரலாற்று நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு-பிறரிடம் பெறுவது ஒன்று; தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது.[1]
- சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று.[2]
- அழகு புறத்தில் தெரியும்படியான ஒரு பரிசு அது எவர்களுக்கு மறிக்கப்பட்டுள்ளதோ அவர்களைத் தவிர வேறு எவரும் வெறுப்பதில்லை.[3]
- சம்பாஷணை. உலக அறிவை விருத்தி செய்யும். ஆனால், ஏகாந்தம் பேரறிவின் பள்ளிக்கூடம். [4]
- புத்தகங்கள் ஞானிகள் வீரர்களுடைய இதயங்களை நம் உள்ளத்திற்குப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன.[5]
குறிப்புகள்
[தொகு]
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/சரித்திரம். நூல் 179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 137-138. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 274-276. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.