கி. வீரமணி
Appearance
(கி.வீரமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கி.வீரமணி திராவிடர் கழகத்தின் தலைவர். திராவிடர் கழகத்தின் இயக்க இதழான விடுதலையின் 50 ஆண்டுகால ஆசிரியர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் கொண்டு வர 31(சி) என்ற தனிச்சட்டத்தை உருவாக்கி கொடுத்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.[1]
- மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல; அறிவின் ஊற்றுக்கள். உணர்ச்சியின் உறைவிடங்கள்.[1]
- உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.[1]
- அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன், கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை.[1]
- மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல; அறிவின் ஊற்றுக்கள். உணர்ச்சியின் உறைவிடங்கள்.[1]
- உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.[1]
- அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன், கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை.[1]
- மனிதன் அடக்கம் என்ற போர்வையில் தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.[1]
- அடக்கத்தின் சிறப்பே, நாம் உயர உயரப் பணிவும், அடங்கலும் அதிகமாகிக் கொண்டே வருதலில்தான் இருக்கிறது.[1]
- உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.[1]
- எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும்.[1]
- தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது கற்பதால் வரும் அறிவு; வெறும் படிப்பால் பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம் கற்பது வேறு; படிப்பது வேறு.[1]
- புத்தகங்களைப் படிப்பதை விட, மனிதர்களைப் படிப்பதே மிக மிக முக்கியம்.[1]
- வாழ்க்கையில் தவறுகள் என்று ஒன்றுமில்லை; எல்லாம் பாடங்கள், அனுபவங்கள், அவைதான் நன்மையைத் தருபவை.[1]
- எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.[1]
- தனக்கு நேர்ந்த அனுபவங்களை ஒவ்வொருவரும் மறு ஆய்வு செய்து, அசை போட்டு, சிந்தித்துப் பார்க்க தவறக் கூடாது.[1]
- சிலருக்கு வாழ்க்கைக் கடலில் லட்சியக் கரை சேர அவரது அனுபவம் என்ற நீச்சல் பயன்படுகிறது.[1]
- அன்றாடம் அனுபவம் என்ற பக்கங்களைக் கொண்டது நமது வாழ்க்கை; அதைத் திறந்த புத்தகமாக வைத்துக்கொள்வோம்.[1]
- நோயைக் குணப்படுத்துவது டாக்டர்கள் கடமை, நோயாளியின் மனதைச் சரிப்படுத்துவது பார்வையாளரின் பொறுப்பு என்பதை மறவாதீர்.[1]
- பகலும் இரவும் எப்போதும் ஒன்றையொன்று துரத்துவது போலத்தான், மகிழ்ச்சியும் சோகமும் ஒன்றையொன்று முந்தப் பார்க்கும்.[1]
- நாம் மூச்சை இழுத்து வெளியே விடுவதுபோல, அன்பையும் இருவழிப்பாதை ஆக்கினால் உலகமே நம் கைக்குள் வரும்.[1]
- மகிழ்ச்சி என்பது நமது சுற்றுச் சூழல் தருகின்ற கொடை அல்ல; உள்ளத்திலிருந்து கிளம்ப வேண்டிய ஊற்று.[1]
- உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது.[1]
- உடலை அழகுபடுத்திக் கொள்வதை விட மிகமிக முக்கியம் நம் மனதை, உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மனதை மதித்து வாழ்வது.[1]
- உள்ளத்தில் அறிவை நட்டுக் கொண்டு, மனத்தை அழகுபடுத்திக் கொள்வது மிகவும் தேவை.[1]
- உணர்ச்சிகள் என்பன, நமது புலன்கள் மூலம் நாம் அறிவதையொட்டி நமக்குள் ஏற்படுத்தும் அலைகள்.[1]
- அடிக்கடி உணர்ச்சி வயப்படாதீர்கள், உணர்ச்சிகளை நீங்கள் ஆளுங்கள், உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டுவிடாதீர்கள்.[1]
- எதையும் பதற்றமின்றிச் சலனமில்லாமல் ஓடும் சிற்றோடை போல வாழ்க்கையைப் பார்க்கப் பழகியவரை, துன்ப அலைகள் அலைக்கழிக்கவே முடியாது.[1]
- பிழைபட உணர்தலைப் போக்க வேண்டுமே தவிர, காக்கவோ பெருக்கவோ கூடாது.[1]
- எதையும் நயம்பட உரைத்தலில்தான் நம் வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது.[1]
- உறுதி மொழிகளை எப்போதும் நிதானித்து அளியுங்கள்; அவசரப்பட்டுக் கூறி பிறகு அவதிக்குள்ளாகாதீர்கள்.[1]
- நாம் பிறருக்கு உதவும் போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.[1]
- நல்ல நூல்களை நாள்தோறும் படிப்பவர்களின் மனம் விசாலப் பார்வையால் விரியும், அகண்டமான அந்த அறிவினால் உலகை விழுங்க முடியும்.[1]
- எப்போதும் மவுனம் தேவையில்லை; தேவைப்படும்போது மவுனம் சிறந்த ஆயுதம்.[1]
- எளியதைச் செய்ய எவராலும் முடியும். எதிர்கொள்ள பலரும் அஞ்சும் பணியை செய்ய என்னால் முடியும் என்று துணிவு கொள்க.[1]
- காதல் என்பது துள்ளும் இளமைப் பருவத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கவர்ச்சியால் ஈர்க்கப்படுதல்.[1]
- நாம் மந்தைகள் அல்ல ஒரே பக்கம் ஓடிச்செல்ல, மனிதர்கள்! நாட்டுக்கு நாடு மட்டுமல்ல; வீட்டுக்கு வீடு மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் மாறுபடுகின்றன, வேறுபடுகின்றன.[1]
- கையில் ஒரு மனிதனுக்குக் காசில்லா நிலை ஏற்பட்டாலும், மனதில் மாசில்லா நிலையிலிருந்து அவன் மாறக்கூடாது.[1]
- நோய்களில் கொடிய நோய் மூடநம்பிக்கை என்ற நோய்தான்.[1]
- கடமை, உரிமை இரண்டையும் புரிந்து, ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக் கொடுக்காத மன உறுதி வேண்டும்.[1]
- ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.[1]
- இளைய பருவத்திலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விளையாட்டைப் போலவே மிகுந்த ஈடுபாட்டுடன் பெருக்கி கொள்வது மிக நல்லதாகும்.[1]
- நம்முடைய மனம் என்னும் காட்டுக் குதிரையை அடக்கிக் குறிப்பிட்ட சரியான வழியில் அதனை நடைபோட வைப்பதே பகுத்தறிவு.[1]
- செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.[1]
- நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவை பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால்தான் மூளை; இன்றேல் அது வெறும் ஈளை.[1]
- எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.[1]
- மணிக்கணக்கில் பேசாமல், மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து.[1]
- அறிவு ஆள வேண்டிய இடத்தில், உணர்ச்சிப் போதையை ஏற்று வாழ்க்கையை வீணாக்காதீர், மானிடர்களே!.[1]
- நாம் இழக்கும் எதையும் திரும்ப பெற முடியும். இரண்டை இழந்தால் மீண்டும் பெறவே முடியாது. ஒன்று உயிர் மற்றொன்று காலம்.[1]
- காலத்தைத் தன்கையில் வைத்துள்ள எவருக்கும், ஞாலம் தன் காலடியில் என்ற துணிவும் தன்னம்பிக்கையும் தானே வரும்.[1]
- இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். புகழ் ஓட்டமும் அதுபோலத்தான். அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.[1]
- காலத்தை கருவூலப் பொருளைச் செலவழிப்பதைவிட, கவனம் அதிகமாகக் கொண்டு செலவழியுங்கள்.[1]
- பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே 'நன்றி' என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட வேண்டும்.[1]
- ஆக்கச் சிந்தனையோடு வாழுங்கள், எதையும் எதிர்மறையாக சிந்தித்து வாழாதீர்கள். ஆக்கச் சிந்தனை ஊக்கத்தை, உயர்வை வளர்க்கும், எதிர்மறைச் சிந்தனை நம்மை பள்ளத்தில் தள்ளும்.[1]
- கூட்டுக்குழு மனப்பான்மையை முதல் மூலதானமாகக் கொண்டு முன்னேறுங்கள்.[1]
- நம்மை முன்நிறுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளுவது முதலீடு அல்ல; அதுவும் வரவுக்கு மிஞ்சிய செலவு.[1]
- வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்குத் தன்முனைப்பு ஒரு தடைக்கல்.[1]
- ஒருவருக்கு மென்மேலும் தன்னம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தால் அவரை திறமைசாலியாக ஆக்கிக் காட்ட முடியும்.[1]
- தன்னம்பிக்கையோடு செயல்படுவோர் சோதிடம் என்ற மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டால், அது எட்டிப் பழத்தைக் கடித்த கதைதான்.[1]
- எண்ணம் இல்லாத செயல் - வரப்பற்ற வயல்; செயல் இல்லாத எண்ணம் - காட்டில் காய்ந்த நிலா.[1]
- முதலில் திட்டமிட்டுச் செயலாற்றுங்கள், அதில் தோல்வி எதிர்ப்பட்டாலும் கவலைப்படாதீர்கள் மீண்டும் முயலுங்கள்; வெல்வீர்கள்![1]
- திட்டமிட்டுச் செயலாற்றுங்கள். தீர்வுகள் வெற்றியின் உச்சத்திற்கே உங்களை அழைத்துச்செல்லும்.[1]
- இளைஞர்களே உங்கள் இளமைப்பருவம் உழுது, விதைத்து, உழைத்து அறுவடை செய்ய வேண்டிய அரிய பருவமாகும்.[1]
- எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல், நாளை வரும் துன்பங்களைக் கூட துரத்தியடிக்கும், மறவாதீர்![1]
- பிறருக்காக துயரப்படுவது என்பது மானிடப்பற்றை, மனித நேயத்தை மிகவும் வளர்க்கும்.[1]
- முடிவு எடுக்கத் திணறாதீர், முடிவு எது வந்தாலும் ஏற்கும் ராணுவ வீரர்களைப் போன்ற நெஞ்சுரம் தேவை.[1]
- ஏழைகளால் ஏற்றம் உண்டு; கோழைகளால் எந்தப் பயனும் ஏற்படவே ஏற்படாது.[1]
- உங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரும், உங்களுக்கு உள்ளத்தில் உறுதி இருந்தால் அது பேரிடராக இருக்காது; பெரும் திருப்பத்திற்கு அடிகோலிய ஒரு சம்பவமாக மாற்றமடையலாம். மறவாதீர்![1]
- தீர்க்கவே முடியாத, தீர்வில்லாப் பிரச்சினைகள் என்று உலகில் எங்கும் எப்போதும் கிடையாது![1]
- நம் வாழ்வில் துன்ப நிகழ்வுகள், இன்பத்தின் அடித்தளம் என்பதை நாம் எண்ணாமல் வேதனையில் வெந்து விரக்தியால் சாகலாமா?[1]
- மகிழ்ச்சியை எப்படி வரவேற்று மகிழ்கிறாயோ அப்படியே உனக்கேற்படும் துன்பத்தையும் ஏற்றுப் பழகுக.[1]
- கடின உழைப்பும், லேசான மனமும் , எதையும் எதிர்கொள்ளும் துணிவும் உள்ளவர்களுக்குத் தூக்கம் எட்டாக்கனி அல்ல; கிட்டா மருந்தல்ல.[1]
- தூக்கம் நம்மை குளுமைப்படுத்தும் ஒரு மாமருந்து; புத்துணர்ச்சியைத் தரும் ஊக்க மருந்து.[1]
- துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.[1]
- இருட்டை நாம் குறை கூறுவதைவிட, ஆளுக்கு ஒரு சிமிழ் விளக்கை ஏற்றி ஒளி வீசச் செய்து இருட்டை விரட்டுவோம்.[1]
- வாழ்வில், இல்லறத்தில் நாம் இருந்தாலும் அதிலுள்ள பல்வேறு சுமைகளை மறந்து, இன்பத்தில் திளைக்க உதவிடும் ஒரே அறம் தொண்டறம் ஆகும்.[1][1]
- நாம் நண்பர்களைப் பகைவர்களாக்க அன்றாடம் முயலுவதைத் தவிர்த்துப் பகைவர்களையும் நண்பர்களாக்கிட முயல வேண்டும்.[1]
- நகைச்சுவை உணர்வுடன் இருங்கள்; நகைச்சுவை உணர்வுதான் பல நேரங்களில் நம் உள்ளத்தில் பசுமையை வளர்க்கும்.[1]
- ஒருவரின் திறமைக் குறைவை விட, நாணயக் குறைவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.[1]
- நாணயம் என்பது நம்மைப்பற்றிய உண்மைகளை நம்மிடம் (நம் உள்ளத்துள்ளும்) பிறரிடம் ஒளிக்காமல் சொல்வதே.[1]
- நமக்கு நெருக்கடி, வீழ்ச்சி, தோல்வி வரும் போது யார் நம்முடன் மாறாமல் நிற்கிறார்களோ, அவர்களே தலைசிறந்த நண்பர்கள்.[1]
- மூளைக்கும் உணவு தேவைதானே? சிந்தனையைக் கூர்மைப்படுத்த - சானை தீட்ட அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு.[1]
- மதுவும், சூதாட்டமும் மனிதர்களின் மானத்தையும், அறிவையும் பறிக்கும் கேடு கெட்ட நோய்கள் என்பதை உணருங்கள்.[1]
- பணத்தை நமது பணியாளனாக நடத்துங்கள், ஒரு போதும் பணத்தை எஜமான் ஆக விடாதீர்.[1]
- குழந்தைகளிடம் பாசத்தைக் கொட்டுங்கள். அன்பை மழையாகப் பெய்யுங்கள், அரவணைத்து முத்தம் கொடுங்கள்.[1]
- செயல் என்ற காற்று, துயரத்தைத் துரத்தி அடித்து விரட்டும், மறவாதீர்.[1]
- பணிகளைப் பகுத்துத் தொகுக்கும் முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.[1]
- படித்தவர் எண்ணிக்கை பெருகிய அளவுக்குப் பண்பாளர்கள் எண்ணிக்கை பெருகவில்லையே.[1]
- ஒருவரை நாம் அறிவாளியாகக் கருதுவதுகூட, உரையாடும் போது அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்ததே.[1]
- சிக்கலான பிரச்சனை வரும்போது சிங்கம்போல சிலிர்த்து எழுங்கள்! நரிகள் வளைகளைத் தேடுவது போல் ஓடாதீர்கள்![1]
- நம்மைப்பற்றி விமர்சனங்களை மற்றவர் செய்யும் போது, அது உண்மையாயிருந்தால் தாராள மனதோடு ஏற்றுத் திருத்திக்கொண்டு வாழ முயற்சியுங்கள்.[1]
- எதையும் ஏற்றுப் பழகி, தீர்வு காணுவது எப்படி என்று திட சித்தத்துடன் அப்பிரச்சினையினை அலசி ஆராய்ந்தால், தீர்வு தென்பட்டே தீரும்.[1]
- மனிதன் புகழ் ஆசை என்ற போதை ஏற ஏற மன நிறைவு கொள்ளத் தெரியாதவனாக ஆகிவிடுகிறான்.[1]
- இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்; புகழ் ஓட்டமும் அதுபோலத்தான், அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.[1]
- உங்களை ஒருவர் ஆத்திரமூட்டும் போதும், எரிச்சல் ஏற்படுத்தும் போதும் அதனை ஓர் அலட்சியப் புன்னகையோடு எதிர் கொள்ளுங்கள், அதற்குப் பதில் அளிக்காதீர்கள்; மதிப்பளிக்காதீர்கள்.[1]
- இன்பத்தினை அடைய சிரிப்பு ஒரு திறவுகோல், அது மட்டுமல்ல, நம்மை மனிதம் மலர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதும் அச்சிரிப்புதான்.[1]
- கடிகாரம் ஓடும் முன் ஓட பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 1.39 1.40 1.41 1.42 1.43 1.44 1.45 1.46 1.47 1.48 1.49 1.50 1.51 1.52 1.53 1.54 1.55 1.56 1.57 1.58 1.59 1.60 1.61 1.62 1.63 1.64 1.65 1.66 1.67 1.68 1.69 1.70 1.71 1.72 1.73 1.74 1.75 1.76 1.77 1.78 1.79 1.80 1.81 1.82 1.83 1.84 1.85 1.86 1.87 1.88 1.89 1.90 1.91 1.92 1.93 1.94 1.95 1.96 1.97 பகுத்தறிவாளர் நாட்குறிப்பு 2013 ஒவ்வொரு நாளினுடைய தலைப்பு பகுதியிலும் உள்ளது