உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிடர்

விக்கிமேற்கோள் இலிருந்து
(திராவிடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • சில விஷயங்களில் மட்டும் நம்மைத் திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்று சொல்லிக் கொன்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொன்டால் இரன்டுங்கெட்ட இழிநிலையைத் தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை. [1]
  • திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால், கடைசி மூட நம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதைக் காரனுக்கு வேலையிருக்கிறது. [2]
  • சிலர் திராவிடன் என்பது வடமொழி என்பார்கள். அதைப்பற்றிய கவலையோ ஆராய்ச்சியோ தேவையில்லை. 'காபி' என்பது ஆங்கிலச் சொல் என்று எவனாவது 'காபி' குடிக்காமல் இருக்கிறானா? [3]
  • இந்து மதப் பண்டிகைகள், திராவிடர்களை இழிவுபடுத்தி என்றென்றும் அடிமைப்படுத்தவே ஏற்பட்டவை.[4]

சான்றுகள்

[தொகு]
  1. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5 தத்துவம் 2, பக்கம் 4128
  2. விடுதலை தலையங்கம் 21-10-1952
  3. குடி அரசு 9-12-1944
  4. 4.0 4.1 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  5. "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு

வெளியிணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=திராவிடர்&oldid=10943" இலிருந்து மீள்விக்கப்பட்டது