எச். ஜி. வெல்ஸ்
Appearance
ஹெச். ஜி. வெல்ஸ் அல்லது எச். ஜி. வெல்சு (H. G. Wells, செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிபுனை படைப்புகளாலேயே அறியப்படுகிறார்.
இவரது மேற்கோள்கள்
[தொகு]- கவசமிடப்பட்ட சாதனங்களில் அமர்ந்து மனிதன் வான வெளியின் தனிமையினுள் பறந்து செல்லும் ஒருநாள் விரைவிலேயே வரும். அப்போது அவன் உலகைச் சுற்றி வந்து செய்திகளை அனுப்புவான். ரப்பரால் ஆன உடையணிந்து முகமூடி தரித்து அவன் இவ்வாறு வானவெளியினுள் ஊடுருவிச் செல்லும்போது அது மனித சமுதாயத்தின் தலைவிதியையே மாற்றியமைத்து விடும்.[1]
- அரசர்கள், ஏகாதிபத்தியங்களின் உண்மையான வலிமை சேனைகளிலும் உணர்ச்சிகளிலும் இல்லை. ஆனால், அவர்கள் கபடமில்லாமலும், உண்மையாகவும், சட்டப்படியும் நடக்கிறார்கள் என்று மக்கள் கொள்ளும் நம்பிக்கையிலேயே அது அமைந்துள்ளது. அந்த உயர் நிலையிலிருந்து ஓர் அரசாங்கம் விலகியவுடன். அது ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுள்ள ஒரு கூட்டத்தைத் தவிர வேறில்லை. அதன் முடிவு காலமும் நெருங்கி நிற்கும்.[2]
- முதலாவதாக மாணவன் தன் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும். பேசவும், படிக்கவும். எழுதவும் நாம் கற்பிக்கவேண்டும்.[3]
- இராணுவ மயமாக்கும் கொள்கையும், யுத்தமும் குழந்தைத் தனமாக இருக்கின்றன. அதைவிடப் பயங்கரமானவையாகவும் இருக்கின்றன. அவை பழங்கால விஷயங்களாக மறைந்து விடவேண்டும்.[4]
- விஞ்ஞான உலகில் பெரிய நோக்கங்களுக்காக, சுயநல ஆசையின்றிச் சிரத்தையுடன் வேலை செய்ததை நான் காண்கிறேன். இந்த முறை. மனிதர்களின் மற்ற முயற்சிகள் அனைத்திலும் பரவும் என்று நான் நம்புகிறேன். [5]
சான்றுகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 155-156. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 313-314. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.