டங் சியாவுபிங்
Appearance
டங் சியாவுபிங் (எளிய சீனம்:邓小平 ஆங்கிலம் Deng Xiaoping; 22 ஆகத்து 1904 – 19 பெப்ரவரி 1997). 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைளைச் சீனாவில் நடைமுறைப்படுத்தியவர்.
மேற்கோள்கள்
[தொகு]- எலிகளைப் பிடிக்கும் பூனை கறுப்பாயிருந்தாலென்ன வெளுப்பாயிருந்தாலென்ன
- சீனாவின் அரசியல் நிலையும் பீகிங்கின் அதிகாரப் போராட்டமும் (1977), பக்கம். 107 ஆங்கில நூல்
- சேம்பர்ஸ் மேற்கோள்கள் நிகண்டின்படி (1993), இந்த மேற்கோள் 1962 யூலை திங்களில் நிகழ்ந்த சீனப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் கூட்டமைப்பு மாநாட்டில் சுட்டப்பட்டது
- ஆயிரக்கணக்கான நமது சீன மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும்போது சீனா தன்னை எவ்வாறு உருமாற்றிக்கொள்ளும் என்பதைப் பார்ப்பீர்கள்.
- ஃபோர்ப்ஸ் (தொகுதி. 176, பதிப்பு 7-13 (2005), பக்கம். 79) (ஆங்கில) இதழில் சுட்டப்பட்டது