உள்ளடக்கத்துக்குச் செல்

ரெய்னர் மேரியா ரில்க்

விக்கிமேற்கோள் இலிருந்து
ரெய்னர் மேரியா ரில்க் (1900)

ரெனே கார்ல் வில்லெம் யோகண் யோசஃப் மரியா ரில்கே (René Karl Wilhelm Johann Josef Maria Rilke, 4 திசம்பர் 1875 – 29 திசம்பர் 1926) ஓர் பொகீமிய–ஆஸ்திரிய கவிஞர். இவர் ரெய்னர் மரியா ரில்கே என்று நன்கு அறியப்பட்டவர் . இடாய்ச்சு மொழியில் மிகவும் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக விளங்குகிறார். மரபுவழிக்கும் நவீனத்துவத்திற்கும் இடைப்பட்டவராக கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஒரு பெண்ணின் தோள்மீது கைவைத்த அளவிலேயே, என்னுடைய காதலின் முழுமையான உணர்ச்சியைத்தெளிவாக அவளுக்கு உணர்த்த முடியும்.[1]
  • நான் கலையை வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை; எப்படியும் அவையிரண்டிற்கும் பொருள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.[1]
  • யார் வெற்றியைப்பற்றிப்பேசுகிறார்கள்? எதையும் தாங்கும் இதயமே வாழ்க்கை[1]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • ரில்க்கின் கவிதைகள் சீரழிந்து போன நடுத்தர வர்க்கத்தின் பிதற்றல்கள்! எனக்கு அவற்றைப் பற்றிக் கவலையில்லை -பெர்டோல்ட ப்ரெக்ட்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 கவிஞர் முருகு சுந்தரம் (1993). புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள். நூல் 42-54. அன்னம் (பி)லிட். Retrieved on 11 சூன் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ரெய்னர்_மேரியா_ரில்க்&oldid=37128" இலிருந்து மீள்விக்கப்பட்டது