லிண்டன் பி ஜான்சன்
Appearance
லிண்டன் பி ஜான்சன் (1908 - 1973 என்பவர் ஐக்கய அமெரிக்காவின் 36 வது அதிபராவார். அதற்கு முன் 1961 முதல் 1963 வரை ஜான் எப் கென்னடியின் கீழ் துணை அதிபராக இருந்தவர். கென்னடியின் படுகொலைக்கு பின்பு 1963 ஆம் ஆண்டுமுதல் 1969 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிபராக பணியாற்றினார். இவர் சிவில் உரிமைகள், கல்வி, வறுமை ஒழிப்பு, மருத்துவம். கலை, நகர, கிராம வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். தனது காலகட்டத்தில் திறமைவாய்த தலைவராக கருதப்பட்டார்.
- நேற்று என்பது மீட்பதற்கு நம்முடையதல்ல; ஆனால் நாளை என்பது வெற்றி பெறவோ அல்லது தோல்வியடையவோ நம்முடையதே.
- அமைதி என்பது ஆயிரம் மைல்களுக்கான பயணம், இதில் ஒரு நேரத்தில் ஒரு அடி மட்டுமே எடுத்துவைக்க வேண்டும்.
- வாய்ப்பிற்கான கதவுகளைக் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் கதவுகளின் வழியே செல்வதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
- மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில், வாக்கு மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும்.
- சரியானவற்றை செய்வது கடினமான விசயமல்ல; சரியானவற்றை அறிந்துகொள்வதே கடினமான விசயம்.
- துப்பாக்கிகள், குண்டுகள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் ஆகியவை அனைத்தும் மனித தோல்வியின் சின்னங்கள்.
- நாம் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமில்லை.
- நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது எதையும் கற்றுக்கொள்வதில்லை.
- வாக்குரிமை இல்லாத மனிதன், பாதுகாப்பு இல்லாதவனாவான்.
- சிறந்தவற்றை அடைவதற்கான தேடலே உன்னதமான தேடல்.
- கல்வி என்பது பிரச்சினை அல்ல, அது ஒரு வாய்ப்பு.
- கற்றுக் கொள்வதற்கு வறுமை தடையாக இருக்கக் கூடாது; வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பினை கற்றல் வழங்க வேண்டும்.
வெளி இணைப்புக்கள்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ லிண்டன் பி ஹான்சன், தி இந்து வணிக வீதி இணைப்பு, 2016 ஆகத்து,22