உள்ளடக்கத்துக்குச் செல்

வில் ரோஜர்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
வில் ரோஜர்ஸ் 1922

வில் ரோஜர்ஸ் (William Penn Adair "Will" Rogers, 4, நவம்பர் 1879 – 15, ஆகத்து 1935) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேடை மற்றும் திரைப்பட நடிகர், நகைச்சுவை கலைஞர், பத்திரிகை கட்டுரையாளர், சமூக ஆர்வலர், எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட செய்தித்தாள் கட்டுரைகள் இவரது படைப்புகளில் அடங்கும். அக்காலத்தில் அதிக சம்பளம் பெறும் ஹாலிவுட் திரை நட்சத்திரமாக விளங்கினார். தனது அணுகுமுறையால் உலகின் பிரபலமான நடிகர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒருவராக அறியப்பட்டார். 1935 ஆம் ஆண்டு வடக்கு அலாஸ்காவில் ஏற்பட்ட ஒரு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.

இவரது கருத்துகள்[1]

[தொகு]
  • மற்றவர்களின் உரிமைகளை அங்கீகரிக்க கற்றுக்கொள்ளும் வரை, ஒருபோதும் நாம் உண்மையான நாகரிகத்தைப் பெறப்போவதில்லை.
  • உங்களால் முடிந்த சிறந்ததை செய்யுங்கள், வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
  • நான் நகைச்சுவைகள் எழுதுவதில்லை. அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கவனித்து, அதை செய்திகளாக வெளியிடுகிறேன் அவ்வளவுதான்.
  • நல்ல தீர்ப்பு அனுபவத்திலிருந்து வருகின்றது, அதிகப்படியான அனுபவம் மோசமான தீர்ப்பிலிருந்தே வருகின்றது.
  • நீங்கள் வெற்றிகரமாக இருக்கவேண்டுமென்றால், அது எளிதானதே. செய்வதை அறிந்து செய், செய்வதை விரும்பி செய், செய்வதை நம்பிக்கையோடு செய்.
  • ஒரு மனிதன் இரண்டு வழிகளில் மட்டுமே கற்றுக்கொள்கிறான்; ஒன்று படிப்பதன் மூலமாக, மற்றொன்று புத்திசாலிகளுடன் இணைந்திருப்பதன் மூலமாக.
  • எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள் நகைச்சுவையாளர்களை தீவிரமாகவும், அரசியல்வாதிகளை வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்.
  • எல்லாமே வேடிக்கைதான், அது வேறு யாருக்கோ நடக்கின்றவரை.
  • அவரவர் துறையை தவிர, அனைவரும் அறியாமையில் உள்ளனர்.
  • அரசியல் மிகவும் விலை உயர்ந்ததாக மாறிவிட்டது, அதில் தோல்வியடைவதற்கு கூட நிறைய பணம் தேவைப்படுகின்றது.
  • பிறர் தம்மைப்பற்றிப் பேசுவதையே நான் எப்பொழுதும் கேட்க விரும்புகிறேன். அப்பொழுதுதான் நான் சதா நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க முடிகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வெற்றி மொழி: வில் ரோஜர்ஸ்
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வில்_ரோஜர்ஸ்&oldid=17843" இலிருந்து மீள்விக்கப்பட்டது