சார்லி சாப்ளின்
Appearance
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- நான் மழையில் தான் நடக்கிறேன்; நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது.
- நான் புரட்சியாளன் இல்லை! மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே!
- சுதந்திரத்தில் நம்பிக்கைக் கொண்ட தனிமனிதன் நான். இது மட்டும்தான் என் அரசியல்.
- ஓர் அழகான பெண், ஒரு காவல்காரன்(போலீஸ்), ஒரு பூங்கா, இந்த மூன்றும் எனக்குப் போதும் நகைச்சுவையை உருவாக்க.[1]
- ஹைட்ரஜன் குண்டுகளும் அணு குண்டுகளும் நம்மை அழிப்பதற்கு முன்னால், அவற்றை நம்மால் அழித்து விட முடியும் என்று நான் நம்புகிறேன்.[2]
- அருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது.
- கண்ணாடி என்னுடைய சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை.
- நீங்கள் கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.
- எனது உதடுகளுக்கு என்னுடைய பிரச்சினைகள் ஒருபோதும் தெரியாது, அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
- எனது வலி யாரோ ஒருவருடைய சிரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனது சிரிப்பு யாரோ ஒருவருடைய வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது.
- இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நமது துன்பங்களும்தான்.
- நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்; மிக குறைவாகவே உணர்கிறோம்.
- வாழ்க்கை அற்புதமானதாக இருக்க முடியும், நீங்கள் அதைப்பற்றி பயப்படவில்லை என்றால்.
- சிரிப்பு இல்லாத நாள், வீணடிக்கப்பட்ட நாள்.
- எளிமை என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.
- புத்திசாலித்தனத்தை விட அதிகமாக நமக்கு கருணை வேண்டும்
- இந்த நிலை மாறிவிடும்.
"த கிரேட் டிக்டேட்டர்"
[தொகு]த கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஹிட்லரைப் பகடி செய்து சாப்ளின் ஆற்றும் உரை.
- நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.
- நான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல.
- சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்!
சிந்தனை
[தொகு]- நமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.
- நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.
- அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.
மனிதம்
[தொகு]- ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.
- நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள்.
பேராசை
[தொகு]- மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசையானது நஞ்சைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பினால் இந்த உலகத்துக்கே முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் மக்களைத் தள்ளிவிட்டது.
- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது.
- நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது பேராசையின் விளைவுதான்.
போர் வீரர்களுக்கு
[தொகு]- உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!
சாப்ளின் கனவு கண்ட உலகம்
[தொகு]- மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின்
வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்.
- இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய பூமி, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய அளவுக்கு வளம் மிக்கது.
- அரசியலில் எனக்கு எந்தவிதமான ஆர்வமும் கிடையாது. மக்கள் குடியிருக்க வசதியான வீடுகளைப் பெற வேண்டும். மூன்று வேளைகளுக்கும் தேவையான அளவு உணவு அவர்களுக்குக் கிட்ட வேண்டும். நேர்த்தியான முறையில் அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கக்கூடிய நிலைமை அடைய வேண்டும். இவற்றையே நான் பெரிதும் விரும்புகிறேன். நகைச்சுவைக்கென்றே நான் படங்களைத் தயாரிக்கின்றேன். நகைச்சுவை, மக்களைத் தொல்லைகளிலிருந்து விடுபட உதவுகிறது.[3]
சுதந்திரம்
[தொகு]- மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.
- சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!
புதிய உலகம்
[தொகு]- இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.
- புதிய உலகைப் படைப்பதற்க்காக, நாடுகளுக்கு இடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப்பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம்.
நபர் குறித்த தேற்கோள்கள்
[தொகு]- என்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் ’சார்லி சாப்ளின்’ என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவ்வளவு பொருத்தமல்ல. சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன். —என். எஸ். கிருஷ்ணன்[3]
சான்றுகள்
[தொகு]- ↑ My Autobiography (1964) Ch. 10
- ↑ சாப்ளினின் 70ஆவது பிறந்தநாள் அன்று நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் இருந்து. 16 April 1959
- ↑ 3.0 3.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.