உள்ளடக்கத்துக்குச் செல்

விஞ்ஞானிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து
  • அடுத்தவர் விட்ட இடமே எனது தொடக்கம் - தாமஸ் ஆல்வா எடிசன்
  • தவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.
  • அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.
  • எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அதற்கு எதிராக செய்ய முடியும்.
  • ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.
  • வெகு அதிகமாக படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித் தனத்துக்கு சென்றிடுவான்.
  • சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.
  • கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.
  • அறிவியலல்லாத செயல்களில் மூக்கை நுழைக்கும் அறிவியலாலனும் முட்டாளே.
  • ஒன்றுமே அறியாதவனாகத்தான் நான் பிறந்தேன். என்னை மாற்றிக்கொள்ள கொஞ்ச காலம்தான் கிடைத்திருக்கிறது.
  • நீங்கள் எப்படிப்பட்ட மேதாவி என்பதோ உங்கள் தேற்றம் எவ்வளவு அழகானது என்பதோ கொஞ்சம்கூட முக்கியமில்லை. சோதனை முடிவுகளுடன் பொருந்திப் போகாவிட்டால் உங்கள் தேற்றம் தவறானது, இதுதான் முக்கியம்.
  • நான் செய்பவற்றை ஒரு சாதாரண மனிதனுக்கு புரியும்படி என்னால் சொல்ல முடியும் என்றால், நான் நோபல் பரிசுக்கு தகுதியானவன்.
  • என் முதல் விதி இதுதான்: நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக் கொள்ளக்கூடாது, ஆனால் நீங்கள்தான் மிக எளிதில் முட்டாளாக்கப்படக்கூடியவர்.
  • நாம் மனித இனத்தின் ஆரம்ப கால கட்டத்தில் இருக்கிறோம். நாம் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்துவிடக் கூடாது. மாறாக நம்மால் எவற்றை செய்ய முடியுமோ, எவ்வளவு கற்க முடியுமோ, எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவையும் செய்து வரும் சந்ததிகளுக்கு அவற்றை அளிக்க வேண்டும்.
  • அனைத்து உண்மைகளும் புரிந்துகொள்ளப்பட எளிதானவை. ஆனால், அவற்றை கண்டுபிடிப்பதே சிரமமான காரியம்.
  • அறிவியல் உண்மைகளை மறுப்பதன் மூலம், எந்தவொரு முரண்பாட்டையும் வாழ வைக்கலாம்.
  • அவனிடமிருந்து ஏதாகிலும் கற்றறிய முடியாதபடிக்கு நான் எந்தவொரு முட்டாளையும் கண்டதில்லை.
  • இயற்கை எழுப்பும் கேள்விகளுக்கு விடை காண, நாம் சோதனைகள் மூலமாகத்தான் செல்ல வேண்டும். சித்தாந்தங்களினபடி அல்ல.
  • இரவைக் கண்டு பயமே வராத அளவுக்கு நான் நட்சத்திரங்களை ரசிக்கிறேன்.
  • நான் சொல்கிறேன், நிரூபிக்கப்பட்டவற்றை நம்புவது ஆன்மாவுக்கு பாதகமானது.
  • அறிவியல் கருத்தாக்கங்களில், ஆயிரம் நபர்களின் அதிகாரம் ஒன்றுக்கும் உதவாது. ஆனால், ஒருவனின் பகுத்தறிவு மிக முக்கியப் பங்களிக்கும்.
  • அறிவியல் என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றிய அறிவாகும். அறிவியல் என்பது, இயற்கையில் நாம் காண்பவை நமக்கு மகிழ்ச்சியூட்டும்.
  • இயற்கையின் 'கருந்துளைகள்' மிகவும் சிறந்த பெரும்படைப்புகளாகும். அவற்றின் கட்டுமானத்தில் உள்ளவை நமது காலம் மற்றும் வெளி பற்றிய அறிவு மட்டுமே.
  • கலைகளை மதிக்கும் பாராட்டும் எண்ணம் அறிவியலை சிறந்த முறையில் செய்ய உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
  • சமுதாயத்துக்கு அறிவியலின் பயன்பாடு மற்றும் அறிவியலில் இருந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் திறம் பற்றி நான் அறிந்தே இருக்கிறேன்.
  • "நடக்கவே இயலாது" எனும் பதத்தை பெரும் எச்சரிக்கை உணர்வோடு பயன்படுத்த நான் கற்றிருக்கிறேன்.
  • மனிதன் மற்ற அனைத்து பற்றுகளிலும் இருந்து வித்தலை பெற்றிடலாம். ஆனால், புவியீர்ப்பு மனிதனை புவியோடு பிணைத்திருக்கும்.
  • ஆராய்ச்சி என்பது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியாதபோது நான் செய்துகொண்டிருப்பது.
  • மற்ற கோள்களுக்கு செல்லும் விண்வெளி பயணத்தை பற்றி நான் உறுதியாக ஒன்று கூற முடியும். "உங்கள் வரித் தொகை உயரும்".
  • பெரும்பாலான லுத்தரன் பையன்களைப் போல நான் கைக்கடிகாரமும், பேண்டும் முதல் பரிசாக பெறவில்லை. நான் பெற்றது ஒரு தொலைநோக்கி. எனது தாயார் எனக்கு அதுதான் பொருத்தமான பரிசாக இருக்கும் என்று நினைத்தார்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=விஞ்ஞானிகள்&oldid=6874" இலிருந்து மீள்விக்கப்பட்டது