உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் மனோகர் லோகியா

விக்கிமேற்கோள் இலிருந்து
உணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு இருப்பதே சாதியை ஒழிக்கும்.

ராம் மனோகர் லோகியா (Ram manohar Lohia:மார்ச்சு 23,1910- அக்டோபர் 12, 1967) அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். புரட்சிகரமான சிந்தனையாளர்.' பிரஜா சோஷலிஸ்ட் கட்சி'யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்; உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்

மேற்கோள்கள்

[தொகு]
  • சாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையை குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளை குறுக்குகிறது; சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும் என்றார் ராம் மனோகர் லோகியா. மேல்தட்டிலுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டிலுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும்.
  • உணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு (ரொட்டி அவுர் பேட்டி) இருப்பதே சாதியை ஒழிக்கும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ராம்_மனோகர்_லோகியா&oldid=9517" இலிருந்து மீள்விக்கப்பட்டது