வாலி (கவிஞர்)

விக்கிமேற்கோள் இலிருந்து

கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்.
  • "இவர்கள் வளர்ப்பதற்கும் வழிப்பதற்கும் தமிழென்ன தாடியா? மீசையா - எங்கேனும், மகவால் வளர்ந்த தாயுண்டா - மலரால் வளர்ந்த தருவுண்டா, நகத்தால் வளர்ந்த விரலுண்டா - நிழலால் வளர்ந்த உடலுண்டா" - என தமிழை தாம் வளர்ப்பதாகச் சிலர் தம்பட்டம் தட்டுவதைப்பற்றி கூறினார்.[1]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • "அவர் எழுதும் அழகு - அதில் விளையாடும் தமிழ்நடை, தமிழ்த்திரை உள்ளவும், தமிழ்மொழி உள்ளளவும், தமிழ்மண் உள்ளளவும் அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்...!" - வாலியைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 396-398. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=வாலி_(கவிஞர்)&oldid=12720" இலிருந்து மீள்விக்கப்பட்டது