சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
Appearance
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
- ஆசிரியர்: கபிலதேவ நாயனார்.
பாடல்கள்
[தொகு]- அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
- அந்தியே போலும் அவிர்சடையான் – அந்தியில்
- தூங்கிருள் யாமமே போலும் சுடுநீற்றான்
- வீங்கிருள்சேர் நீலம் மிடறு.[1]
என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.
- தாமரைக் கோவுநன் மாலும் வணங்கத் தலைப்பிடத்துத்
- தாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத்
- தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர்கண்டீர்
- தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடி சங்கரரே.
என்பது இந்நூலில் ஆறாம் பாடலாக அமைந்துள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல். இந்தப் பாடலில் மடக்கு என்னும் அணிநலம் காணப்படுகிறது. அந்த மடக்குகளில் பிரித்துப் பொருள் காணவேண்டிய பொதுமொழித் தொடர்கள் உள்ளன.[2]