சாய்னா நேவால்

விக்கிமேற்கோள் இலிருந்து

சாய்னா_நேவால் (பிறப்பு: 17 மார்ச் 1990) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை.

மேற்கோள்கள்[தொகு]

  • பாட்மின்டன் மைதானத்துக்குள் ஒவ்வொரு முறை நுழையும்போதும் என் இதயம் அதிகம் படபடக்கும். கைகளில் ராக்கெட்டை எடுக்கும்போது நடுக்கம் இருக்கும். அப்போது மைக்கில் 'சாய்னா நேவால்... ஃப்ரம் இந்தியா’ என, என் பெயரை உச்சரிக்கும்போது... உடல் சிலிர்க்கும். இந்தியத் தேசத்தின் பிரதிநிதியாக நான் இங்கே நிற்கிறேன். நான் என்பது என் தேசம். எனக்காக, என் பெற்றோருக்காக, என் பயிற்சியாளர்களுக்காக, ஒவ்வோர் இந்தியருக்காக இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் பற்றிக்கொள்ளும். அது மட்டுமேதான் என்னைக் கொண்டு செலுத்தும்![1]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • ஒவ்வோர் ஆட்டக்காரருக்கும் 'சிக்னேச்சர் ஸ்ட்ரோக்’ என ஒன்று உண்டு. உயரத்தில் பறந்து வரும் இறகுப் பந்தை, எகிறிக் குதித்து எதிர் களத்தில் தரையோடு தரையாக வேகமாக அடித்து எதிரியை நிலைகுலையச் செய்யும் 'ஸ்மாஷ் ஸ்ட்ரோக்’ அடிப்பதில் சாய்னா கில்லாடி. இதன் எதிர் துருவமாக எதிரியின் வலையை ஒட்டி இறகுப் பந்தை விழச் செய்யும் 'டிராப் ஷாட்’ அடிப்பதிலும் சாய்னா கில்லி.[1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 முகில் (08 ஏப்ரல் 2015). NO 1 சாய்னா நேவால். Retrieved on 31 மே 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சாய்னா_நேவால்&oldid=14525" இலிருந்து மீள்விக்கப்பட்டது