பெனசீர் பூட்டோ
Appearance
பெனசீர் பூட்டோ (Benazir Bhutto 21 ஜூன் 1953 – 27 டிசம்பர் 2007), பாகிஸ்தானில் மத்திய-இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார்.பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.அவர் பாகிஸ்தானின் முதல் மற்றும் இன்று வரையிலும் ஒரே பெண் பிரதம மந்திரியாவார்.
இவரது கருத்துகள்
[தொகு]- ஒரு பெண் தலைவராக வித்தியாசமான ஒரு தலைமைத்துவத்தை நான் கொண்டு வந்திருப்பதாகக் கருதுகிறேன். ஒரு பெண்ணாக, பெண்களின் பிரச்சினைகள், மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைப்பது போன்றவற்றின் மீது நான் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன். அரசியலில் நுழைந்தபோது கூடுதல் பரிமாணம் ஒன்றுடன்தான் நுழைந்தேன். தாய் என்கிற பரிணாமம் அது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தி இந்து, பெண் இன்று ( இணைப்பு) 2016 நவம்பர் 15