உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டீவ் ஜொப்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஸ்டீவ் ஜொப்ஸ் 2010

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். இவர் 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.

இவரது மேற்கோள்கள்

[தொகு]
  • நீங்கள் செய்கின்ற வேலைதான் உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிரப்பப் போகின்றது.
  • இது தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை அல்ல. மக்களின் மீதான நம்பிக்கை.
  • உங்களது இதயம் மற்றும் உள்ளுணர்வைப் பின்பற்றத் தேவையான தைரியத்தைக் கொண்டிருங்கள்.
  • உங்களது வேலையில் மனப்பூர்வமாக திருப்தியடைவதற்கான ஒரே வழி, செய்கின்ற வேலையை மனதார நேசித்து செய்வதே.
  • உங்களுக்கான நேரம் குறைவானது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணடிக்க வேண்டாம்.
  • வடிவமைப்பு என்பது வெறுமனே பார்ப்பது மற்றும் உணர்வது அல்ல. வடிவமைப்பு என்பது செயல்பாட்டில் உள்ளது.
  • உலகின் மிகச்சிறந்த சாதனங்களை உருவாக்குவதே எங்களது இலக்கு, மிகப்பெரியவற்றை அல்ல.
  • தேவைப்படுவதை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள். ஓய்ந்துவிடாதீர்கள்.
  • வணிகத்தில் மிகப்பெரிய விஷயங்கள் ஒரு நபரால் செய்யப்பட்டவை அல்ல. அவை, பலரால் உருவான குழுக்களின் மூலம் நிகழ்த்தப்பட்டவை.
  • வயதான மக்கள் “இது என்ன?” என்று கேட்கிறார்கள். ஆனால், சிறுவனோ “இதைக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்கிறான்.
  • கல்லறையில் பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கச்செல்லும் போது, இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்துவிட்டோம் என்று சொல்வதே பெரிய விஷயம்.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஸ்டீவ்_ஜொப்ஸ்&oldid=14807" இலிருந்து மீள்விக்கப்பட்டது