முதலடி
Appearance
ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்குச் செய்யும் முதலாவது காரியத்தை முதலடி என்கிறாேம்.
மேற்கோள்கள்
[தொகு]- உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு.உனது துணிவிலேயே அறிவும்,ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. - கோதி
- நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - மார்டின் லூதர் கிங்.
- செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது,உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும்.ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- டாக்டர். டேவிட் செவார்ட்சு
- நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை - டிக்கன்சன்