இழான் இழாக்கு உரூசோ

விக்கிமேற்கோள் இலிருந்து

இழான் இழாக்கு உரூசோ (ஜான் ஜாக் ரூசோ, Jean-Jacques Rousseau, சூன் 28, 1712 – சூலை 2, 1778) ஒரு முக்கியமான பிரான்சிய மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் பிரான்சியப் புரட்சியிலும், தாராண்மைவாதம், பழமைவாதம், சமூகவுடமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது.

மேற்கோள்கள்[தொகு]

  • உடல் துன்பம், மனச்சான்றின் பச்சர்த்தாபம் இவ்விரண்டும் தவிர இதர துன்பங்கள் எல்லாம் வெறுங்கற்பனைகளே, உண்மையானவை அல்ல.[1]
  • தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று. வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுதுதான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே.[1]
  • மனச்சாட்சி ஆன்மாவின் குரல், உணர்ச்சிகள் உடலின் குரல்கள் இவைகளுக்குள் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதில் வியப்பில்லை.[2]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23. 
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300-301. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இழான்_இழாக்கு_உரூசோ&oldid=35554" இலிருந்து மீள்விக்கப்பட்டது